சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை, மைத்திரிற்கு விட்டுக்கொடுக்க மஹிந்த இணக்கம்
(AdT)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விட்டுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
that means MR is trying to become a Prime Minister in the next government and close all files against him
ReplyDelete