தேர்தல் வன்முறைகளுடன் கோத்தாபயவுக்கு தொடர்பு?
-MFM.Fazeer-
ஜனாதிபதி தேர்தல் காலத்தின் இடம்பெற்ற பல வன்முறைகளுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் செயற்பட்ட காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட கடற்படையின் ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் தரத்திலான அதிகாரி ஒருவருக்கும் மேலும் மூவருக்கும் தொடர்புள்ளமை பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
வெல்லம்பிட்டி உமகிலிய மைதானத்தில் பிரசார மேடை மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் விஷேட விசாரணைப் பிரிவினர் முன்னெடுக்கும் தேர்தல் வன்முறைச் சம்பவம் ஒன்று தொடர்பிலான விசாரணைகளின் போதே இந்த தொடர்பு குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலின் போது பல்வேறு பிரதேசங்களில் பதிவான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் டிபண்டர் வாகன அச்சுறுத்தல் தொடர்பில் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந் நிலையில் குறித்த கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட ஓய்வு பெற்ற ரியல் அட்மிரலும், அங்கு பணி புரிந்த வெவ்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மூவரையும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன் அவர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வேன் ஒன்றினையும், கைத்துப்பாக்கி ஒன்றினையும், இரு மகஸின்களுடன் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியின் 47 ரவைகளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வெல்லம்பிட்டிய, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் பதிவான தேர்தல் வன்முறை சம்பவங்களுடன் இவர்களுக்கு நேரடி தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாத்துப் பார்த்து இருக்காமல் அவசரமாக கூண்டுக்குள் அடைக்க வேண்டியது தானே. பின்னர் விசாரணை செய்யலாம்.
ReplyDeleteஎன்ன தாமதம் இன்னும்இவன பிடித்து உள்ள போடவில்லையா உடனடி நடவடிக்கை டுக்க வேண்டும்
ReplyDelete