மன்னர் அப்துல்லாவின் மரணம், மாற்று மதத்தினருக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்..!
சவூதி மன்னர் மரணம்: கொடி சாயவில்லை, குடியும் சாகவில்லை!
சஊதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் 23-01-2015 வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவருக்கு வயது 90.
கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். செயற்கை சுவாசத்தில் இருந்து வந்த அவர் இன்று சவுதி அரேபியா நேரப்படி (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணிக்கு காலமானார்.
திருமறைக்குர்ஆன் என்ற வேதம் போட்ட தவ்ஹீத் அஸ்திவாரத்தில் அமைந்த சவூதி அரசாங்கத்தின் சக்கரவர்த்தி தான் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ்! இவர் ஒன்றும் சாதாரணமானவர் அல்ல! உலக நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்கின்ற ஒரு நாட்டின் மன்னர். சவூதி தான் உலகத்திலேயே மிகப் பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு.
இந்த அளவுக்குச் செல்வமும் செல்வாக்கும் பெற்ற மன்னர் இறந்ததும் அந்த நாட்டில் அரசு விடுமுறை இல்லை. அந்நாட்டுக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவும் இல்லை. இதற்குக் காரணம் அந்த நாட்டுக் கொடியில் ஏற்றப்பட்டிருக்கும், எழுதப்பட்டிருக்கும் ஏகத்துவக் கொள்கையின் வார்த்தைகள்.
"லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்'' என்று அந்தக் கொடியில் பொறித்திருப்பது அந்த நாடு கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கையின் பிரகடனமாகும். அதனால் முடி (மன்னர்) சாய்ந்த பின்னும் அந்த நாட்டின் கொடி சாயவில்லை. குடியும் சாகவில்லை!
இஸ்லாம் தனி நபர் வழிபாட்டைத் தரைமட்டமாக்கி விட்டது.
ஒருவர் இறந்து விட்டால் அவரை உரிய முறையில் அடக்கம் செய்வது கடமையாகும். இதைத் தான் அந்நாட்டு மக்கள் செய்யப் போகின்றனர். விமானப் போக்குவரத்து நிற்கவில்லை. பஸ், கார், ரெயில் போக்குவரத்து பாதிக்கவில்லை. அரசு அலுவலகங்களுக்கு மூடு விழா நடத்தப்படவில்லை. அந்நாட்டு முடி சாய்ந்ததால் எந்த ஒரு குடியும் சாகவில்லை. எந்த ஒரு குடியும் எதுவும் கிடைக்காமல் நோகக் கூட இல்லை. ஒரு மன்னர் இறந்து விட்டார் என்று கூடத் தெரியவில்லை. காரணம் நமது நாட்டைப் போன்று எந்தப் பேருந்தும் அங்கு பற்றி எரியவில்லை.
சாதாரண அடக்கம்
இந்த அளவுக்கு அங்கு இயல்பு வாழ்க்கை கடுகளவுக்கும் பாதிக்காமல் அப்படி ஒரு அமைதி! இந்த அமைதிக்குக் காரணம் இஸ்லாம்! இஸ்லாம் என்றால் அதன் மறு பெயர் அமைதி தானே! இதைத் தான் சவூதி மன்னர் இறந்த போது உலகம் கண்டது. மேலும் நம் நாட்டைப் போல் தலைவர் இறந்ததும் நேரடி ஒளிபரப்பு என்று காசைப் பாழாக்கவில்லை. மன்னருக்காக ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்தை அர்ப்பணிக்கவில்லை.
ரியாதில் அல் அவ்து என்ற பொது மயானத்தில் ஆறடி நிலத்தில் தான் ஆடம்பரமின்றி அடக்கம் செய்யப்படுவார்.
மன்னரின் அடக்கத்தலத்தில் ஒரு கல் (அடையாளத்துக்காக) வைக்கப்படும். அதில் மன்னர் என்ற பெயர் கூட பொறிக்கப்படாது. ஆண்டியும் இங்கே! அரசனும் இங்கே! என்ற கவிஞன் கூற்றுப்படி சமரசம் உலாவும் இடமாக சவூதி மன்னரின் சமாதி பொது அடக்கத்தலத்தில் அமைக்கப்படும் .
இவ்வாறு அடக்கம் செய்யப் பட்டதால் அவரது உடல் அநாதைப் பிணம் என்று யாரும் கருதி விடக் கூடாது. பல இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களும் அவரது ஜனாஷாவிற்கு வருகை தரவிருக்கின்றனர்.
.
தரை மட்டமான தனி நபர் வழிபாடு
இப்படிப்பட்ட ஒரு பணக்கார நாட்டு மன்னரின் அடக்கத்தலம் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய வகையில் அமையப் போகிறது. . பல கோடிக்கணக்கான பணச் செலவில் பளிங்கால் அமையவில்லை. அரசுப் பணம் சாம்பலாகும் வகையில் அணையா விளக்கு எரியவில்லை. இதற்குக் காரணம், தனி நபர் வழிபாட்டை இஸ்லாம் தகர்த்தெறிந்தது தான்.
முஸ்லிம்களுக்கு அவர்களின் உயிர், உடமை, மனைவி, மக்கள், பெற்றோர் அனைத்தையும் விட மேலானவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்கள், தாம் இறந்த பிறகு தமது அடக்கத்தலத்தை மரியாதை செலுத்தும் வணக்கத்தலமாக, வாசஸ்தலமாக ஆக்கி விடக் கூடாது என்று மிகக் கடுமையாக தமது வாழ்நாளில் எச்சரித்து இருக்கின்றார்கள். (பார்க்க புகாரி 1390)
அந்தத் தூதரின் வேத வரிகள் அடிப்படையில், அந்த சத்தியத் தூதருக்கே சமாதி எழுப்பவில்லை. அதன் அடிப்படையில் தான் சரியான முஸ்லிம்கள் தங்கள் சமுதாயத்தில் கண்ணிய மிக்கவர்கள் எவருக்கும் சமாதிகள் எழுப்புவதில்லை. இது தொடர்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேரடிக் கட்டளை இதோ!
"தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1609)
இறந்தவருக்குத் தேவை ஆறடி தான்
பொதுவாக கடந்த காலம் தொட்டு இன்று வரை இறந்து விட்ட பெரியார்களுக்காக நினைவாலயங்கள் எழுப்புவது மக்களின் இரத்தத்தில் ஊறிப் போன உணர்வாகி விட்டது. அதைத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இங்கு உடைத்தெறிகின்றார்கள்.
பத்தடி நிலம் வாழ்வதற்கு இல்லாத போது, இறந்தவருக்கு ஏக்கர் நிலத்தை அர்ப்பணம் செய்யும் அரக்க குணத்தை தகர்த்தெறிகின்றார்கள்.
சரியான சிந்தனைத் தெளிவோட்டம், பகுத்தறிவுக் கண்ணோட்டம் இதைத் தான் சரி காணும்.
மக்கள் நலம் நாடும் அரசு, இஸ்லாம் கூறும் இந்த வழி காட்டுதலைத் தான் தனது குடி மக்களிடம் அமல் படுத்த வேண்டும். அப்போது தான் நடிகராக இருந்தாலும், நாடாளும் தலைவராக இருந்தாலும் அவர் மரணிக்கும் போது எந்தக் குடிமகனும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டான்.
அந்த வகையில் சவூதி அரசாங்கம் மன்னரின் மரண விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் இஸ்லாத்தின் நெறிமுறைகளைத் தூக்கிப் பிடிப்பதாக அமைகின்றது.
நமது நாட்டிலுள்ள முஸ்லிம்களிலும் ஆலிம்கள், பெரிய மனிதர்கள், கொடை வள்ளல்கள் இறந்து விட்டால் வானளாவிய மனாராக்கள் எழுப்பும் இந்தக் கலாச்சாரத்திற்கும் மரண அடியைக் கொடுக்கின்றது.
ஆக மொத்தத்தில் சவூதி மன்னரின் சாதாரண அடக்கம் மாற்று மதத்தவருக்கு மட்டுமல்ல! முஸ்லிம்களுக்கும் தகுந்த பாடத்தையும் படிப்பினையையும் தந்திருக்கின்றது என்றால் மிகையல்ல!
-Abdul Naser Misc
மண்ணறையில் அடக்கப்படும்போது எளிமையை ப் போதித்த இஸ்லாம் அதைவிட வாழும் போது எளிமையாக வாழுமாறு போதித்துள்ளது. ..
ReplyDeleteYes.true.
ReplyDeleteஜனாஸா நல்லடக்கம் உண்மையில் வரவேற்றகக் கூடியதே ஆனால் சவுதி மன்னர் என்று கூறாமல் முஸ்லிம்களின் கலிபா என்று கூற முடியவில்லையே அதுதான் கவலைக் குறியது. இஸ்லாம் மையத்தை அடக்குவதில் மற்றுமல்ல ஆட்சி நடத்துவதிலும் முன்மாதரியை காட்டியுள்ளது. நபி வழ என்பது அரண்மனை வாழக்கையல்ல. அரசாட்சி அல்ல. ஊடகங்கள் இன்று கூறுகின்றன உலகின் மிக்ப பெரும் கோடிஸ்வரர் சவுதி மன்னர் என்பதாக. ஆனால் இஸ்லாமிய வரலாறு கூறுமம் கலீபாக்கள் எப்படி வாழந்தார்கள் என்பது இங்கு நான் கூற வேண்டியதில்லை.
ReplyDeleteஎனது ஆட்சியின் கீழ் ஒரு நாய் கூட பட்டினியினால் இறந்தால் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்று பயந்த இஜ்லாமிய தலைவர்கள் மத்தியில் 2014 இல் காஸாவில் எமது சகோதரர்கள் இளம்சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட போது இந்த மன்னர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.?
எந்தப் பலமுமில்ல ஒரு சாதாரண குடிமகன் கூட இந்த இஸ்ரேலிற்கு எதிராக கொதித்தெழுந்த போது வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாத இவங்கலெல்லாம் முன்மாதரியான தலைவர்கள்
Abdul Naser's view has telling one way, after death people will do Allah's order when they buries and King can not order for luxury but before death did you see any normal life,
ReplyDeletesome time Saudi money make them to talk like this. this is not fair.
அல்லாஹ அவருடைய பாவத்தை மன்னிக்க வேண்டும்..
ReplyDeleteஆனால் எனக்குள்ளால் சில கேள்விகள் எழத்தான் செய்கிறது..
*ஏகத்துவ கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவில்லை, காரணம் சொன்னீர்கள்
"இஸ்லாமிய உணர்வு மேலோங்கி இருந்தது என்று.."
எம் முதல் கிப்லா இருக்கும் 'பலஸ்தீன்' யூத காட்டு மிராண்டிகளால் தாக்கப்படும் போது எங்கே
சென்றது இவர்களின் இஸ்லாமிய உணர்வு ?
*இந்த மேற்கத்தேய சதிகளால் எம் முஸ்லிம் பல நாடுகள் தாக்கப்படும்போது எதிராகதான் குரல் கொடுக்கவில்லை...
ஏன் அமெரிக்காவையும் இஸ்ரேலயும் அரவனைதீர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக உதவியும் செய்தீர்கள்...... இப்போதெல்லாம்
நீங்கள் சொன்ன
இஸ்லாமிய உணர்வு எங்கே?
* எம் உறவுகள் பட்டினியால் சாகும் போது கல்யாணம் என்ற பெயரிலும், birthரா டே என்ற பெயரிலும் செய்த வீண்விரயம் எங்கனம்?
தயவு செய்து நியாயமில்லாமல் பொருத்தப்பாடு காண வேண்டாம்..
சொல்ல வந்ததை நேரடியாக சொல்லுங்கள் மக்கள் புரிந்து கொள்வார்கள்....
' YAARUM ALLAAH VIN VISAARANAI ILIRUNTHU LESAAKA THAPPA MUDIYAATHU "........AVLAVUTHAN EMMAAL KOORA MUDIYUM......
ReplyDeleteசகோதரர் ziyad! இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ள செய்தி ஏனைய நாட்டுத் தலைவர்களோடு ஒப்பிட்டால் வசதி வாய்ப்பு நிறைந்த ஸவுதி அரேபியாவின் மன்னரின் ஜனாஸாவை அடக்கப்பட்ட முறை வித்தியாசமாக இருந்தது என்பதே. இதைப் புரியாமல் எளிமை என்பது அடக்கத்தில் மாத்திரம் இன்றி வாழும்போது கடைபிடிக்க வேண்டியது உண்மை என்பதை நீங்கள் சொல்லித்தான் மக்கள் புரியவேண்டியதில்லை. எனவே இங்கு எழுதப்பட்டுள்ள செய்தி பிற நாட்டு ஜனாதிபதி, தலைவர்களுக்கு மத்தியில் ஓர் இஸ்லாமிய நாட்டு ஜனாதிபதியின் நிலை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது மட்டுமே.
ReplyDeleteAll are affected by the teachings of their so called ... JAMATHS
ReplyDelete