Header Ads



பாதிரியாருக்கு வீடுகட்ட, சுடுகாட்டை தோண்டிய தேவாலய நிர்வாகம் - கொந்தளிக்கும் மக்கள்

(Mm)

இங்கிலாந்தின் எஸ்சக்ஸ் கவுண்டி லாப்டன் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் (பாப்டிஸ்ட் சர்ச்) பாதிரியாராக இருப்பவர் வெய்ன் டல்சன். இவர், தேவாலயத்துக்கு அருகே தனது வீட்டைக் கட்டுவதற்காக அங்குள்ள சுடுகாட்டிலிருந்து ஜேசிபி மூலம் இதுவரை 1860 பேரின் எலும்புகளைத் தோண்டியெடுத்து அதை சவப்பெட்டிக்குள் போட்டு இடம் மாற்றியுள்ளனர். இந்த கோரமான சம்பவத்தை குழந்தைகள் உட்பட அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்து வேதனை அடைந்துள்ளனர்.

கடந்த வருடம் தேவாலயத்துக்கு அருகில் உள்ள நான்கு படுக்கையறை கொண்ட வீடு 6 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டுக்கு விற்கப்பட்டதாகவும் தற்போது டல்சன் கட்டி வரும் வீடு 1 மில்லியன் பவுண்டு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 கோடி) மதிப்பிருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த காரியத்தை செய்யும் டல்சன் மீது அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த கோலின், “மயானத்தில் அமைதியாக உறங்கும் மனித உடல்களை தோண்டியெடுத்து துணி சுற்றுவது எவ்வளவு மோசமான விஷயம். சர்ச்சை நம்பி தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை ஒப்படைத்த உள்ளூர் மக்களிடம் இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் பார்த்தீர்களா” என்றார்.

நான்கு குழந்தைகளின் தாயான சிமோன் கூறுகையில், “இதில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் எலும்புகளைப் பொறுக்கி சவப்பெட்டியில் வைப்பதை குழந்தைகள் பார்ப்பதுதான்” என்றார்.

இதுகுறித்து டல்சன் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக 5.5 லட்சம் பவுண்டுகள் முதலீடு செய்திருப்பதாகவும், அரசிடம் உரிய அனுமதி பெற்றே இந்த பணியை மேற்கொள்வதாகவும் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.