இஸ்ரேல் தாக்குதல், ஹிஸ்புல்லாவின் முன்னணி தளபதி பலி - பதிலடி கொடுக்கப்படும் நஸ்ருல்லா எச்சரிக்கை
சிரியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோலன் குன்று பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் லெபனான் 'சியா குழுவான ஹிஸ்புல்லாவின் ஆறு போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் ஹிஸ்புல்லாவின் காலஞ்சென்ற இராணுவ தளபதி ஒருவரின் மகன், முன்னணி தளபதி ஒருவர் மற்றும் குறைந்தது ஒரு ஈரானியர் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவின் குனைத்ரா பகுதியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட் டிருந்தபோதே இவர்கள் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லாவின் அல் மனார் தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதல் ஒன்றுக்கு உளவு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இதில் 2008 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட உயர்மட்ட தளபதி ஒருவரின் மகனான ஜpஹாத் முக்னியி மற்றும் ஹிஸ்புல்லாவின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான முஹமது இஸ்ஸா கொல்லப்பட்டிருப்பதாக ஹிஸ்புல்லா அதிகாரிகள் உறுதி செய்துல்லனர். தவிர, ஈரான் புரட்சிப் படையைச் சேர்ந்த ஒருவரும் பலியாகி இருப்பதாக சிரியாவின் மனித உரிமைக் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஈரானிய புரட்சிப் படையின் பலரும் பலியாகி இருப்பதாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
சிரியாவுக்குள் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ருல்லா எச்சரித்து ஒரு சில தினங்களிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் உள்நாட்டு யுத்தத்தில் ஹிஸ்புல்லா அமைப்பு சிரிய ஜனாதிபதி ப'ர் அல் அஸாத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறது. இந்த உள்நாட்டு யுத்தத்தால் 200,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரிய உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்பம் தொடக்கம் இஸ்ரேல் அங்கு அடிக்கடி வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் சிரிய அரசு மற்றும் ஈரானிடம் இருந்து ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்கள் விநியோகிப ;பதை தடுக்கம் இலக்குடனேயே இஸ்ரேல் இவ்வாறான தாக்குதல் களை நடத்தி வருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்புடன் 34 நாள் யுத்தத்தில் ஈடுபட்டது.
Post a Comment