''செத்த மாட்டில் இருந்து, உண்ணி கழர்வதுபோல''
ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற கோஷம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகின்றது. சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும் அராஜக, சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டவேண்டும், ஜனநாயகத்துக்குத் தீரும்ப வேண்டும். அதற்காக பொது வேட்பாளர் மைத்திரீயை ஜனாதிபதி ஆக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகின்றது.
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி பொது வேட்;பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில், சம்மாந்துறை, சாய்ந்தமருது ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வெள்ளிக்கிழமை மாலை அங்கு குழுமியிருந்த ஜனத்திரள் மத்தியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
ஆட்சி மாற்றத்துக்கான முதலாவது அறைகூவலை கோட்டே நாகவிஹாராதிபதி மாதுளுவாவே சோபித தேரர் விடுத்தார். அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தின தேரர் அதற்கான தீவிர நடவடிக்கையில் இறங்கினார்.
நாங்களும் எமது கட்சியின் பல்வேறு மட்டங்களில் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். சமூகம் சார்ந்த, கட்சி சார்ந்த, நாட்டின் நல்லாட்சி சார்ந்த பல அம்சங்களையும் நன்கு அலசி ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிப்பது என ஏக மனதாக முடிவு செய்தோம்.
இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இழைத்த அனியாயங்களை ஓரளவாவது சீர்செய்வதற்காக அரச அமைச்சர்களுடன் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டடதன் காரணமாகவும் எமது தீர்மானம் தாமதமாகியது.
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு அதன் அண்மையிலேயே மாற்றுக்காணி தருகின்றோம் என்றார்கள். கிராண்ட்பாஸ் பள்ளிவாசலை தொழுகைக்காகத் திறந்துவிடவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ முன்வந்தார். ஆனால் அதற்காக எமது முடிவை மேலும் தாமதப்படுத்த போரளிகள் தயாராக இருக்கவில்லை. எனவே சமூகத்தினதும் கட்சியினதும் நன்மைக்காக நாங்கள் அரசாங்கத்தைவிட்டு இறுதியில் வெளியேறினோம்.
ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற கோஷம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகின்றது. சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும் அராஜக, சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டவேண்டும், ஜனநாயகத்துக்குத் தீரும்ப வேண்டும். அதற்காக பொது வேட்பாளர் மைத்திரீயை ஜனாதிபதி ஆக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் எமது ஆவேஷத்தையும் ஆத்திரத்தையும் அள்ளிக்கொட்டி தேவையற்ற விபரீதங்கள் ஏற்படுவதற்கு அடமளிக்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தலைமைகள் எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பட்டியல் போட்டு மக்கள் மத்தியில் கூறுகினற பொழுது அது இன்று பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்தை நோக்கி நடைபெற்றுவரும் அமைதிப் புரட்சிக்கு குந்தகமாக ஆகிவிடக் கூடாது. ஆதனால் ஆபத்துக்கள் ஏற்பட இடமளித்தவிடக் கூடாது. மிக நேர்த்தியாக இப்பொழுது ஓர் அமைதிப் புரட்சி தயாராகிகக் கொண்டிருக்கின்றது.
இப்பொழுது செத்த மாட்டில் இருந்து உண்ணி கழர்வதுபோல, அரசாங்கத்தை விட்டு அதன் உறுப்பினர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.
அரசாங்கத்தை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறினால் அதனால் ஏற்படும் விளைவு அரசாங்கத்தக்கு பாரதூரமான தாக்கங்களை உண்டு பண்ணும். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தடன் இருந்தாலும் கூட முஸ்லிம்களின் வாக்குகள் தமக்குக் கிடைப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வம் என்பது ஜனாதிபதிக்கு மிகவும் துலாம்பரமாகத் தெரிந்த விஷயமாகும். ஆந்த அச்சத்தின் காரணமாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் தொங்கிக்கொண்டு இருந்தாலும் போதும் என்று ஜனாதிபதி எதிhபார்த்தார்.
ஜனாதிபதிக்கு நாம் ஆதரவு அளிப்பது அவரைப் பற்றியும் அவரது சகோதரர்கள் பற்றியும் இந்த நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் மனப்பதிவை இல்லாமல் செய்வதற்காவது குறைந்த பட்சம் உதவியிருக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
முஸ்லிம்கள் மத்தியில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் காணப்படுகின்றது. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பழி தீர்க்க வேண்டும் என்பது எமது மக்களின் நோக்கம் அல்ல. இதுவரை தங்களுக்க இழைக்கப்பட்ட கொடுமைகள் இனியும் தொடரக்கூடாது என்பதுவே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும் என்றார்.
கட்சியின் செயலாளர் நாயகம் எம.ரி. ஹஸன் அலி உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினாகளான எச்.எம்.எம். ஹரீஸ், பைஸல் ஆகியோரும் உரையாற்றினர். மாகாணசபை உறுப்பினர்கள். பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்கும் நாம் அனைவரும் தொழுது துஆ செய்வோம்
ReplyDelete