Header Ads



ஓடிகொலோன் தயாரிப்புக்கு பதிலாக, மதுபானம் உற்பத்தி - முன்னாள் அமைச்சருக்கு நேரடி தொடர்பு

சட்டவிரோதமான முறையில் எதனோலை இறக்குமதி செய்து, மதுபானம் உற்பத்தி செய்ததான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஓடிகொலோன் தயாரிப்பதற்கு எனக் நிறுவனம் ஒன்றுக்கு எதனோல் இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எதனோலைப் பயன்படுத்தி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நிறுவனம் வத்தளை பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் எவ்வகை ஓடிகொலோனும் சந்தையில் விற்பனைக்கு இல்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி மாதாந்தம் 20,000 லீட்டர் எதனோல் (100 பெரல்) இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது.

100 பெரல் எதனோலைப் பயன்படுத்தி சுமார் 50 ஆயிரம் போத்தல் மதுபானத்தை தயாரிக்க முடியும் எனத் தெரியவருகிறது.

1 comment:

  1. நாடு மயிரிழையில் தப்பியது!!

    ReplyDelete

Powered by Blogger.