''பேசவும் பகிரவுமாய்'' நாணயத்துக்கு இரு பக்கங்கள் உள்ளன..!
அரசியல் தலைமைகளில் அதிகாரமுள்ளவர்களாக இருந்தவர்கள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார்கள், அனர்த்தங்களின் போது ஆஜராகினார்கள், சாணக்கியத்துடன், சாமர்த்தியத்துடன் பணியாற்றினார்கள் என்பதை ஏற்கும் மனோபாவம் எல்லோரிடத்திலும் இருப்பது அவசியம் அதேவேளை அத்தகையோர் அல்லாஹ்வுக்காகவும், மக்களின் நலன்களுக்காகவும் என்று கடமை உணர்வுடன் செயற்பட்டிருப்பின் அவர்களை விட மட்டற்ற மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
ஆனால் அதிகார பீடங்களை அலங்கரிப்பவர்கள் பின்வரும் விடயங்களில் தமது கவனத்தை செலுத்துவதும் மிகவும் இன்றியமையாததாகும்.
1. பதவி அதிகாரம் பட்டம் என்பன இறைவன் தந்த அமானிதம் என்பதை சிரமேற் கொள்வது, மக்கள் அதற்கான வித்துக்கள் என்பதை மறத்தலாகாது.பொறுப்புக்களை,கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவது.
2.மக்களின் எஜமானன் என்பதற்கு பதிலாக மக்களின் சேவகன் என்று சதாவும் நினைவில் கொள்வது.
3.சமூகத்தில் இடம் பெறும் கூட்டு முயற்சிகளுக்கு பங்களிப்பு செய்வது, நற் பணிகளை செய்வதற்கு முனைபவர்களை பரந்த மனதோடு ஆதரிப்பது, தட்டிக் கொடுப்பது, ஊக்கப்படுத்துவது அவற்றை விரும்புவது.
4. தன்னை விட பிறரை முற்படுத்துவது. யாரையும் குறைத்து மதிப்பிடாதது. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடுவது, காழ்ப்புணர்வுடன் செற்படுவதில் இருந்து விடுபடுவது.
5.ஆக்கபூர்வமான கருத்துக்களையும்,விமர்சனங்களையும் வரவேற்பது, பிறரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது.
6. ஜனநாயக மரபுகளையும்,விழுமியங்களையும் பேணுவது,மதிப்பது.
7.உரியவர்களுக்கு உரிய அந்தஸ்தையும், மதிப்பையும், கௌரவத்தையும் வழங்குவது.
8. உலமாக்கள், சமயத் தலைவர்கள் மூத்தோர்,துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் முதலானோரின் தொடரான ஆலோசனைகள், வழிகாட்டல்களை பெறுவது.
9.பிறர் பற்றி கிடைக்கும் தகவல்களை முறையாக ஊர்ஜிதம் செய்வது, உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது விவேகத்துடன் செயற்படுவது.
10. வெற்றி, தோல்வி, இன்பம் ,துன்பம் முதலான சந்தர்ப்பங்களில் பொறுமைக் காப்பது.
Post a Comment