மைத்திரிபால சிறிசேன போன்ற, அரச தலைவரை வரலாற்றில் என்றும் சந்தித்ததில்லை - பாப்பரசர்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போன்ற எளிமையான மனிதரை தான் வாழ்க்கையில் சந்தித்ததில்லை என பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால மீது தமக்கு புதுமையான அன்பும், கௌரவமும் ஏற்பட்டதாக புனித பாப்பரசர் தன்னிடம் கூறியதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பொன்றிலேயே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனைத் தெரிவித்துள்ளார்.
பாப்பரசரை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட விழாக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இலங்கைக்கு பயணித்ததில் தாம் பெருமகிழ்ச்சியடைந்ததாக புனித பாப்பரசர் தன்னிடம் தெரிவித்ததாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார்.
உலகில் பல நாடுகளுக்கு தான் பயணம் செய்துள்ளதாகவும், அரச தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கியஸ்தர்களைச் சந்தித்துள்ளதாகவும், எனினும், இவ்வாறானதொரு அரச தலைவரை வரலாற்றில் என்றும் சந்தித்ததில்லை எனவும் புனித பாப்பரசர் தெரிவித்ததாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறினார்.
அன்று..
ReplyDeleteமுன்னைய தலைவரின் ஆடம்பர மோகம், அதிகாரவெறி, தவறான வழிநடாத்தல்களினால் நமது நாட்டிற்கும் அதன் கௌரவத்திற்கும் சர்வதேச மட்டத்தில் பெரும் இழுக்கு உண்டானது.
இன்று..
நமது புதிய ஜனாதிபதியின் எளிமையும் நல்லாட்சி நோக்கமும் பிறிதொரு நாட்டின் தலைவரின் -அதுவும் மாற்று மதத் தலைவரின்-உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருப்பதை எண்ணிப் பெருமையாக உணர்கின்றேன்.
ஒர் இலங்கையராக நமது புதிய ஜனாதிபதிக்காக அனைவரும் பெருமைப்படலாம்.