பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சில அதிசயங்கள்..!
2015 ம் வருடத்திற்கான முதல் அமர்வு இன்று 20-01-2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கூடியது. 2004ம் வருட ஆட்சி மாற்றத்தின் பின்னர் 10 வருடங்களுக்குப் பின்னர் பாராளுமன்றம் புதிய மாற்றத்தை பெற்றுள்ளது.
தற்போதைய ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு முன்வரிசை வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் லக்ஷ்மன் கிரியெல்ல, கரு ஜயசூரிய, ஜோசப் மைக்கல் பெரேரா, காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க, சஜித் பிரேமதாச, கயந்த கருணதிலக்க, மங்கள சமரவீர, ராஜித சேனரத்ன, சம்பிக்க ரணவக்க, துமிந்த திசாநாயக்க, நவின் திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம், மற்றும் பதியுதீன் மற்றும் ரதன தேரர் ஆகியோர் சபையின் முன் வரிசையில் ஆசனத்தை கைப்பற்றியுள்ளனர்.
கடந்த பாராளுமன்ற அமர்வில் சபாநாயகரின் இடது புறத்தில் அமர்ந்திருந்த ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினருக்கு இன்று சபாநாயகரின் வலது புறத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
சபாநாயகரின் வலது புறத்தில் ஜனாதிபதி, பிரதமர், சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதான கொறடா ஆகியோர் அமர்ந்திருந்தனர். சிரேஷ்ட மற்றும் தலைமைத்துவத்தின் அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க அமர்ந்திருந்த ஆசனத்தில் எதிர்க்கட்சித் தலைவரான நிமல் சிறிபால டி சில்வா அமர்ந்திருந்தார்.
இடது புறத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா டபிள்யூ.டீ.ஜே. செனவிரத்ன மற்றும் கட்சியின் தலைவர்களுக்கு முன்வரிசை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
பழைய சபாநாயகர் ஷமல் ராஜபக்ச தலைமையிலே சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. புதிய பிரதமர் சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடரட்டும் நல்லாட்சி.
Do you know the meaning of the word you have used before Rathna the----, it is utter Sirk.
ReplyDeleteஇது என்ன ???? சகிக்க முடியவில்லை.... என்ன பதிவிட்டுருக்கிறீர்கள்????
ReplyDeleteரத்ன தேரரை குறிப்பிடும் போது "வணக்கத்துக்குரிய" என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது... யா அல்லாஹ்.. யா அல்லாஹ்... இது என்ன கோலம்... எழுதுங்கள் மீண்டும் ஒரு புதிய தலைப்பில் அவ்வாசகத்தை பயன்படுத்தியதற்காக "வருந்துகிறோம்" என....