Header Ads



முஸ்லிம்களை கருவறுக்கும் நோக்குடன், உருவாக்கப்பட்டதே பொதுபல சேனா

அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அடாவடி செயற்பாடுகள் கொண்ட பொதுபல சேனா அமைப்பினரே காரணம் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது மேற்கண்ட கருத்தை வலியுறுத்தியுள்ள அவர், பொது பல சேனா அமைப்பு தமிழ், முஸ்லிம்களை கருவறுக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அவ்வாறான ஒரு அமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததையடுத்து, அரசாங்கத்தின் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருந்த அரசாங்கத்தின் ஆதரவுத் தளம் முற்றாக சிதைந்து போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வன்முறைகளுக்கு ஆதரவளிக்கும், வன்முறைகளில் ஈடுபடும் யாரையும் பொதுமக்கள் இந்தத் தேர்தலில் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

4 comments:

  1. It seems you play double game!

    ReplyDelete
  2. So you Agree that Mahinda government is not befitting to rule the people..? Thanks for understanding but still waiting to thank you for your action .... Yes join the opposition to lead the country toward a peaceful future.

    ReplyDelete
  3. He will join on 9th with north chief minister wigneswaran

    ReplyDelete

Powered by Blogger.