Header Ads



மஹிந்த ராஜபக்ஸவுக்காக பிரச்சாரம் செய்யும், சவூதி அரேபியாவுக்கான தூதுவர்

-அஸ்ரப் ஏ. சமத்-

சவுதிஅரேபியாவுக்கு புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட    ஹூசைன் முஹம்மத் கொழும்புக்கு அழைக்கப்பட்டு  கொழும்பு மாநகரப் பிரதேசங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டு முகமாக  இன்று பிரச்சார வேலைகளில் ஈடுபட்டார். 

சிரேஸ்ட அமைச்சர் பௌசியுடன் ஹுசைன் முஹம்மத் சிலேவ் ஜலண்டில் உள்ள வீடுகளுக்குச்  சென்று கெண்வசிங்கில் ஈடுபட்டார். 

ஹூசைன் முஹம்மத்  ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அரபு நாடுகளின் தலைவர்களது நல்ல நண்பன். அதனால் தான் கிண்னியா பாலம் மற்றும் பாதை அபிவிருத்திகளுக்கு சவுதிஅரேபியா நிதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மஹிந்த ராஜபக்ச அவர்களைப் பற்றியும் அளுத்கம சம்பவம் பற்றியும் இந்நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள்  பிழையான தகவல்களை அரபு நாடுகளின் கோப்பிரேசன் தலைவரிடம் சொல்லியிருந்தனர்.

அண்மையில் ஜக்கிய நாடுகள் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதியை அரபுநாடுகளின் கோப்பிரேசனின் தலைவர் சந்தித்து போது -  ஜனாதிபதி அவர்கள் இலங்கை முஸ்லீம் மக்கள் எனது நண்பன், அவர்களைப் பாதுகாப்பது எணது கடமை எனச் சொல்லியிருந்தார். 

முஸ்லீம்கள் நிம்மதியாகவும் சமாதாணமாகவும் வாழ்கின்றனர். கொழும்பு வாழ் முஸ்லீம்கள்தான் இன்று கொழும்பினை அழகு படுத்தி அபிவிருத்திகளை அனுபவிக்கின்றனர். 

கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் கூடுதலானோர் மத்திய கிழக்கில் தொழில் செய்கின்றனர். அவர்களது குடும்பம் மற்றும் தாய் பிள்ளைகள் இலங்கையில்  நிம்மதியாக வாழ்வதற்கும் எவ்வித பயமுமின்றி தனியே அவர்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்வதற்கும் வழிவகுத்துக் கொடுத்தவா.; யுத்தம் ஓய்ந்த பின் குண்டுவெடிப்பு, மற்றும் பயம் இல்லாமல் செய்துள்ளாhர்   இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபகச அவர்கள். ஆகவே முஸ்லீம்கள் இந்த ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டும் என சவுதி அரேபியாவின் தூதுவர்  ஹூசைன் முஹம்மத் தெரிவித்தார். 

இவர் முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மதின் மகன், கடந்த 35 வருடகாலமாக ஜ.தே.கட்சி சார்பில் கொழும்பு மாநகர மேயராக கடமையாற்றியவர். 

3 comments:

  1. இவரல்லாம் சந்தர்ப்ப அரசியல் செய்யும் சந்தர்ப்பவாதிகள் என்பது சகலரும் அறிந்த விடயம் அளுத்கம சம்பவம் பற்றி தவறாக அரபு நாட்டுகளுக்கு சொல்லப்பட்டது என்று இவர் சொல்கிறார் அப்போ அழுத்கமையில் ஒன்றும் நடக்கவில்லை என்று இவர் சொல்லப்போறாரோ கேவலம் கெட்ட உலக பதவி ஆசைக்காக உண்மையை மறைத்து பேசும் இவேர்களிடம் கடுகளவேனும் ஈமான் இருக்குமா என்பது சந்தேகம்தான் இவர்கலல்லாம் முஸ்லிம் தலைவர்களின் மகன் என்றும் இவருடைய தகப்பன் முஸ்லிம்களின் ஒரு தலைவர்தான் என்று சொல்லுமளவுக்கு பிவேர்கள் ஒன்றும் செய்து கிழிக்கவில்லை பொதுவாக இவர்களை முஸ்லிம்கள் யார்யன்றும் தெரியாமல் இருக்கிறார்கள் தேர்தல் பிரசார வேலை முடிந்து இலங்கையிலேயே இருக்க வேண்டிவரும் மைத்திரி வெற்றி பெற்றவுடன் சகல நாட்டு தூதர்களும் மாற்றி அமைக்கப்படும்

    ReplyDelete
  2. A Muslim completely hides the truth here. No matter how much you try my friend, there is a super- power above you and you are accountable what you do and say.

    It is President's duty to develop all over Srilanka. You are well aware how our SL workers are being treated in Arabic countries. It is well documented of demolishing mosques & destroying Muslims' economy are from the backup of the present Government.
    Think about the well being of all SL, rather your own pocket.

    ReplyDelete
  3. Mr.m.Hussain why not publicit ur mahinth election rally ? Saudi government our Saudi HRH king Abdullah bin abdulazeez donate to who epact from tsunami.still not handover.u as a SaudI embasider u should publicit.this matter in e..rally....

    ReplyDelete

Powered by Blogger.