முன்னாள் ஜனாதிபதியும் தற்போது சாதாரண மனிதர் என்றவகையில், குற்றவாளி என்றால் தண்டனை
ஊழல் குற்றங்களில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அவரின் குடும்பத்தினரையும் காப்பாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் எவ்வித உடன்பாடுகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இதனை மறுத்துள்ள ராஜித சேனாரட்ன குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போது சாதாரண மனிதர் என்ற அடிப்படையில் அவரும் ஏனையவர்கள் போலவே நடத்தப்படுவார் என்றும் அமைச்சர் செய்தித்தாள் ஒன்றுக்கான செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment