Header Ads



அட்டாளைச்சேனை கல்வி சமூகம் சிந்திக்குமா..?

-NAFRIS mohamed-

கிழக்கு மாகாணத்தில் கல்வியிலும் , விளையாட்டிலும் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு பாடசாலை அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை. இந்த பாடசாலையில் இருந்து பல கல்வி மான்கள் , விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறந்த அரசியல்வாதிகள் எமது சமூகத்துக்கு உருவாக்கப்பட்டுளார்கள், இந்த சாதனா பாடசாலை இன்னும் சாதனைபடைக்க எல்லாம்வல்ல இறைவன் அல்லாஹ் ஆசிர்வதிக்கவேண்டும். இருப்பினும் கடந்த சில வருடங்களாக எமது இந்த பாடசாலையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் மிகவும் ஒரு பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

 இதன் பின்புலம் என்ன ?? கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் உயிரியல், கணித பிரிவுகளில் இருந்து சுமார் 48  மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர் இதில் 5 மாணவர்கள் மாத்திரமே பல்கலைகழகம் தெரிவாகியுள்ளனர்.

இதேபோல் கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் இருந்தும் குறைவான மாணவர்களே பல்கலைகழகம் தெரிவாகியுள்ளார்கள். எமது பாடசாலையில் விளையாட்டில் மாணவர்களுக்கு இருக்கும் அக்கரை கல்வி கற்பதில் இருக்கிறதா என்பது ஒரு சந்தேகம்தான். அதற்கு சில காரணங்களும் உண்டு. எமது பாடசாலையில் இருந்து மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் யில்விளையாட்டுபோட்டிகளில் எமது பாடசாலை மாணவர்கள் தெரிவாகும் போது அவர்களை கொளரவபடுத்தும் முறைமை பல்கலைகழகம் தெரிவாகும் மாணவர்களுக்கு கொடுப்பது இல்லை , அவர்கள் இந்த பாடசாலை மாணவர்கள் இல்லையா ?? அட்டாளைச்சேனையின் எதிர்கால தலைவர்கள் என்று வர்ணிக்கப்படும் இந்த மாணவர்கள் ஏன் சமூகத்தில் மறைக்கப்பபடுகிறார்கள் ? 

எமது பாடசாலையில் கடைசியாக 2007 ம் ஆண்டு பலகலைக்கழகம் தெரிவான மாணவர்களை பாரட்டும் வைபவம் ஓய்வுபெற்ற முன்னால் அதிபர் AC.சைபுடீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது அதன் பிறகு எமது பாடசாலையில் அப்படியான ஒரு நிகழ்வுகள் நடைபெற்றதாக ஒரு சரித்திரமும் இல்லை. இப்படியானதொரு செயட்பாடினால் எமது பாடசாலை இன் இருந்து பல்கலைகழகம் தெரிவான மாணவர்கள் மிகவும் வருந்துகிறார்கள். எமது பாடசாலையில் தற்போது விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியதுவம் கல்விக்கு கொடுப்பதில்லை.எமது பாடசாலையில் அபிவிருத்தி குழு என்ற ஒரு அமைப்பு பல ஆண்டு காலமாக காணப்படுகிறது இந்த அமைப்பு ஏன் இருக்கிறது ??? இதன் நோக்கம்தான் என்ன ?

எமது பிரதேசத்தின் இரு அரசியல் மாகணசபை கதாநாயகர்கள் காணப்படுகிரார்கள், கிழக்கு மாகணசபை அமைச்சர் MS. உதுமான் மற்றும்   கிழக்கு மாகாணசபை உறுப்பினர்   ALM.நசீர் அவர்கள். தாங்கள் இருவரும் எமது பாடசாலை இருந்து பல்கலைகழகம் தெரிவான மாணவர்களுக்கு கொளரவபடுத்தும் ஒரு நிகழ்வை உங்கள் அரசியல் வாழ்கையில் நடாத்தியது உண்டா ? தயவுசெய்து இனிவரும் காலங்களில் எமது பாடசாலை மாணவர்களின் கல்வி முயற்சிக்கு சற்று உதவி புரியும்மாறு அன்பாக வேண்டுகிறோம். ஒரு பிரதேசத்தின் அடிப்டை காரணிகளில் ஓன்று கல்வி அந்த கல்வியை எமது ஊரில் நிலை நாட்ட அனைத்து கல்வி மான்களையும், அரசியல் வாதிகளையும் வேண்டுகிறோம்.எமது பாடசாலை இல் காணப்படும் சில கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நிவர்த்திசெய்து தருமாறு வேண்டுகிறோம்.


No comments

Powered by Blogger.