Header Ads



'வடபுல முஸ்லிம்கள் சொப்பிங் பேக்குகளுடன் விரட்டப்பட்டபோது, உதவிக்கரம் நீட்டியது டக்ளஸ்' - மௌலவி சுபியான்


யாழ்.மற்றும் கிளிநொச்சி யாழ்.முஸ்லிம் மக்களினதும் பிரச்சினையைத் தீர்த்து எமது முஸ்லிம் மக்களுக்கும் அரசியல் வழிகாட்டியாகவும் தலைவராகவும் விளங்குபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சர் அவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். எனவே முஸ்லிம் மக்களாகிய நாமும் அவரது நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம் என யாழ்.மாநகர சபையின் உறுப்பினர் மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார். 

யாழ். ஐந்து சந்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் பிரசார நிலையத் திறப்பு விழாவில் தலைமை வகித்து உரையாற்றும் போதே மௌலவி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 

வடபுலத்து முஸ்லிம்கள்  சொந்த மண்ணிலிருந்து சொப்பிங் பேக்குகளுடன் விரட்டப்பட்ட போது அம்மக்கள் எங்கே செல்வது எனத் தெரியாமல் தவித்திருந்த சமயத்தில் எந்தவொரு முஸ்லிம் தலைவர்களோ அன்றி தமிழ்த் தலைவர்களோ முன்வராத நிலையில் எம்மை அரவணைத்து உதவிக்கரம் நீட்டியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,

புத்தளப் பகுதியில் எமது மக்கள் குடியேற உதவியவர். நாம் தங்கியிருந்த முகாம் தீப்பற்றி எரிந்த போது எவருமே எமக்கு உதவ முன்வராத நிலையில் தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த செலவில் முகாம் அமைத்துத் தந்தவர் அமைச்சர் அவர்கள். அந்த முகாம் தேவாபாத் என்ற பெயரில் இன்னும் இருக்கக் காணலாம்.

அதுமட்டுமல்லாது இன்றைய தினம் எமது வடபுலத்து முஸ்லிம்கள் படித்தவர்களாக இருப்பதற்கும் காரணம் அமைச்சர் அவர்கள்தான் புத்தளத்திலே இருந்த காலத்தில் எமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டிடங்கள், பாடப்புத்தகங்கள், புலமைப்பரிசில்கள், நிதிஉதவிகள் என வழங்கியவர்.

அதுமட்டுமன்றி எமது மக்களின் குரலை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே எமது மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்;.

அமைச்சர் அவர்களது கட்சியால் நடாத்தப்பட்டு வந்த இதய வீணை நிகழ்ச்சியில் எமது மக்களின் உணர்வுகளை தொடர்ந்து ஒலிக்கச் செய்து சர்வதேச நாடுகளுக்கும் எட்டச் செய்தவர்.

நாங்கள் மீள்குடியேறிய பின்னரும் எமது மக்களின் தேவைகளைப் படிப்படியாகப் பூர்த்தி செய்து வருபவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே ஆவார்.

முன்னாள் முஸ்லிம் அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாட் ஆகியோர் தத்தமது அமைச்சுக்களின் செயற்பாடுகள் காரணமாக இங்கு பலதடவைகள் வருகைதந்துள்ளனர். எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை நான் அவர்களிடத்திலும் சமர்ப்பித்திருந்தேன். எதுவுமே நடக்கவில்லை. ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து தொலைபேசியில் கூறினால் கூட நிச்சயம் அதனை நிறைவேற்றித் தருபவராக இருக்கிறார்.

அந்தவகையில் எமக்கு அரசியல் ரீதியிலான வழிகாட்டியாகவும் தலைவராகவும் திகழும் அமைச்சர் அவர்களின் நிலைப்பாட்டையே நாமும் கொண்டுள்ளோம் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கும் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே வெல்வார் என்பதே  தென்பகுதியின் நிலைப்பாடாக இருக்கிறது. எனவே அவரது வெற்றியில் எமது மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எமது மக்களுக்கு இன்னும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை அவரது நீடித்த ஆட்சியில் நிச்சயமாகத் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எனத் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்தரணி ரெமீடியஸ் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

3 comments:

  1. Might well Douglas have helped to Jaffna Muslims. However, the selection of the President ought to be based on who the best to all SL. MR&Co have demolished many mosques, Halaal certification nullified, Fardhah practice was restricted, Many Thawa movements were branded as terrorists. His son is wearing luxarious watches & buying planes. What else do we need more? Why don't you pray Isthigharah, think one more time to make a good decision? As you are an Aalim, an influential person, it will definitely be good, if you make the right decision.

    ReplyDelete
  2. Jaffna boy Ur absolutely correct ! rajapaksha government has done lot of things to our area and school. But we can't be selfish since his government has done more horrible things to Muslims in other area. So as a whole we cannot and shouldn't support him and at the same we can't trust my3 also because he is a non Muslim too. but we have to keep the faith in Allah and take the decision!

    ReplyDelete
  3. In SL, Muslims cannot expect favouritsm. All Srilankans are equal. We don't need to ask favour from MY3. Only, equal rights. My advice to North& East Tamil speaking folks-Learn Sinhala very well.Deal with all communities same without any differences. No politician can play games.

    ReplyDelete

Powered by Blogger.