ஞானசாரின் நண்பனுடைய, அசிங்கமான பேச்சு
ஐ.நா. தூதர் ஒருவரை வேசி என்றும், பெண் நாய் என்றும் தாக்கி, பிரபல பர்மிய புத்த பிக்கு ஒருவர் பேசியதாகக் கூறப்படும் உரை ஒன்றைப் பற்றி பர்மிய (மயன்மார்) அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
அஷின் விராது என்ற இந்த பிக்கு இந்தக் கருத்துக்களை யாங்கி லீ என்ற இந்த ஐநா மன்றத் தூதரை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில் வெளியிட்டார்.
பர்மாவின் முஸ்லீம் சிறுபான்மையினரின் நிலை குறித்து இந்த நாட்டுக்கு கடந்த வாரம் மேற்கொண்ட ஒரு விஜயத்தின் போது யாங்கி லீ கோடிட்டுக் காட்டினார்.
மயன்மார் அரசின் தகவல் துறை அமைச்சர் , இந்த பிக்குவின் உரையை ஆராய்ந்து பார்க்குமாறு மத விவகார அமைச்சகத்திடம் தான் கோரியிருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால் இந்தப் பிக்குவின் கருத்துக்கள் குறித்த விமர்சனங்கள் மெலிதாகவே ஒலிக்கின்றன. ஏனென்றால், நாட்டின் சக்தி மிக்க பிக்குகள் தங்களுக்கு எதிராகத் திரும்புவதை எந்த அரசியல்வாதியும் விரும்பவில்லை. bbc
Post a Comment