Header Ads



உலகிலேயே மிக இளம் கோடீஸ்வரி

உலகிலேயே மிக இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 24 வயதான ஒரு சீன இளம்பெண் முதலிடத்தை பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.8200  கோடி. இதன்மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் டஸ்டீன் மாஸ்கோவிட்ஸை பின்னுக்கு தள்ளிவிட்டார். சீனாவில் உயர் அடுக்குமாடி  குடியிருப்புகளை கட்டி தரும் லோகன் பிராப்பர்டி நிறுவனம், உலகின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை  நிர்வாக அதிகாரி ஜி ஹைபெங்கின் மகள் கீ பெரன்னா ஹோய் திங் (24). இந்நிறுவனத்தில் பெரன்னா ஹோய் தலைமை இயக்குநராக உள்ளார்.

ஜி ஹைபெங்கின் குடும்ப அறக்கட்டளை மூலம் இயங்கி வரும் இந்நிறுவனத்தில், பெரன்னா ஹோய்க்கு 85 சதவீத பங்குகள் உள்ளன. இதன் மொத்த மதிப்பு  ரூ.8200 கோடியாகும். இதன்மூலம் உலகின் இளம் பணக்காரர் பட்டியலில் பெரன்னா முதலிடத்தைப் பிடிக்கிறார். 

இளம் தொழிலதிபர்களின் சொத்து மதிப்பில்  பேஸ்புக் நிறுவன இணை நிறுவனர் டஸ்டீன் மாஸ்கோவிட்ஸை இவர் பின்னுக்கு தள்ளிவிட்டார் என்று சீனப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

No comments

Powered by Blogger.