'போலி சிறிசேன உருவாக்கப்பட்டதன், பின்னணியில் மஹிந்த தரப்பு' - லக்ஸ்மன் கிரியல்ல
ஜனாதிபதி தேர்தலில் தோல்வி நிச்சயிக்கப்பட்டுள்ள மஹிந்த ராசபக்ஷ தரப்பு போலி சிறிசேன ஒருவரை வேட்பாளராக களமிறக்கியுள்ளதாகவும் கடைசி நேரத்தில் அவரை போட்டியில் இருந்து விலக செய்து அதனூடாக மஹிந்த தரப்பு பொது வேட்பாளருக்கு சேறு பூசும் நிகழ்ச்சி நிரலுக்கு தயாராகி வருவதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் இம்முறை தேர்தலில் போட்டியிட ஆர் ஏ சிறிசேன என்பவர் களமிறங்கியுள்ளார். மைத்ரிபால சிறிசேன அவர்களை போன்று ஒப்பனை செய்யப்பட்டு இன்று சிங்கள நாளிதழ்களில் அவரின் விளம்பரங்கள் பிரசுரமாகின்றன.
மைத்ரி அணியும் உடை வடிவமைப்பு முதல்கொண்டு அவர் அணியும் மூக்கு கண்ணாடி வரை அச்சு அசலாக அவரை போன்று போலி சிறிசேன உருவாக்கப்பட்டுள்ளமை இதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளார் என்ற சந்தேகத்தை உர்ஜிதப்படுத்தியுள்ளது.
கடைசி நேரத்தில் இந்த அரசாங்கத்தின் செட்டப் சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக செய்து சிறிசேன போட்டியில் இருந்து விலகிவிட்டதாக பிரசாரம் செய்ய மஹிந்த தரப்பு திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்வி நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்தவின் முட்டாள்தனமான செயற்பாடுகளில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிதாயத் சத்தார்
கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி முகாமையாளர் .
லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் செயலாளர்....
Post a Comment