சிங்கள - முஸ்லிம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நிபுணர் குழு - அரசாங்கம் தீர்மானம்
சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த விசேட நிபுணர் குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மைய ஆண்டுகளாக சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த முரண்பாடுகளை களைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த புத்திஜீவிகளைக் கொண்ட விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் மொஹமட் ஹலீம் தெரிவித்துள்ளார்.
சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் மிக நீண்ட காலமாக நல்ல உறவு காணப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் இந்த நல்லுறவு பாதிக்கப்பட்டது.
சிங்கள - முஸ்லிம் மக்களுக்கு இடையில் நீண்ட கால நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். புதிதாக நியமிக்கப்படவுள்ள நிபுணர் குழுவில் பத்து பேர் அங்கம் வகிப்பார்கள்.
இந்த நிபுணர் குழுவில் சிங்கள - முஸ்லிம் இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என அவர் சிங்கள பத்திரிகையொன்று நேர்காணல் வழங்கியுள்ளார்.
this is an excellent idea
ReplyDelete