யாரும் மனம் தளரத் தேவையில்லை, பொறுமையாக இருக்கும்படி வேண்டுகிறேன் - மகிந்த ராஜபக்ஷ
J.M.Hafeez)
எனது கட்சி ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக்களை நான் நிறைவு செய்வேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகை , அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களுக்கு சென்று சமயக் கிரிகைகளில் ஈடுபட்டதன் பின் அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எனது தந்தையின் காலம் முதல் எனது குடும்பம் அரசியல் செய்து வருகிறது. வெள்ளையர்கள் ஆட்சியிலும் நாம் அரசியல் செய்தவர்கள். 1931 ஆம் ஆண்டு எனது தந்தை அரசியல் செய்தது முதல் இன்று வரை நாம் பல்லாண்டுகாலம் தொடாந்து அரசியல் செய்கிறோம்.
ஆனால் எமது வீடுகளை பொலிஸார் முற்றுகையிட்டதில்லை.தற்போதைய ஆட்சியில் எனது வீடு சோதனை செய்யப்பட்டது. ஆனால் அங்கு எதுவும் இருக்கவில்லை. எமது நாட்டைப் பொறுத்தவரை இதனை விட உயர்ந்த ஒரு அரசியல் கலாசாரமும் அரசியல் ஒழுக்கமும் தேவைப் படுகிறது.
எனது கட்சி ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக்களை நாம் எதிர்காலத்தில் நிறைவேற்றுவோம். யாரும் மனம் தளரத் தேவையில்லை. சற்று பொறுமையாக இருக்கும்படி வேண்டுகிறேன் என்றார்.
ஐயா,
ReplyDeleteநாங்களும் ஒருகாலத்தில் உங்களது ஆதரவாளர்களாக இருந்தவர்கள்தான்.
முன்னாள் ஜனாதிபதி உங்களின் முன்னாள் ஆதரவாளர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:
நீங்கள் சுமுகமான ஆட்சிமாற்றத்திற்கு எவ்வாறு ஒரு 'கனவான்' போல வழிவிட்டு விலகிச் சென்றீர்களோ அவ்வாறே இதுவரைகாலமும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சொகுசு வாழ்வுக்காக கையாடியதாகவும் வீணடித்ததாகவும் சொல்லப்படும் கோடிக்கணக்கான வரிப்பணத்தையெல்லாம் தயவு செய்து திறைசேரியில் சேர்த்து விடுங்கள்.