Header Ads



நிந்தவூரில் நடைபெற்ற, முஸ்லீம் காங்கிரசின் பிரச்சாரமேடையில் ஆரீப் சம்சுதீன் (படங்கள் இணைப்பு)


(உமர் அலி + சுலைமான் றாபி) 

இன்று 2015  ஜனவரி  3ஆம் திகதி  நிந்தவூர் பிரதான வீதியில்  மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் நோக்கில் நிந்தவூர் முஸ்லீம் காங்கிரசின் மத்தியகுழுவினர் ஏற்பாடுசெய்த பிரச்சாரக்கூட்டத்தில்,கிழக்குமாகாணசபை  உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் பங்குபற்றினார்,

அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துவிட்டு முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் அவர்களுடனேயே அவர் மேடைக்கு வந்தார்,சிறிதுதூரம் நடந்துவந்த அவரை அவரது ஆதரவாளர்கள்  கரங்களில் சுமந்த வண்ணம் மேடைக்கு வந்தார்கள்.அவர்கள் பட்டாசுகள் கொளுத்தி  மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.நேரம் போதாத காரணத்தினால் கூட்டம் பண்ணிரண்டுமணிளவில் முடிவுற்றது, இதனால் ஆவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை 

இத்தேர்தலில் நிந்தவூரில் தொண்ணூறு சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள்  இம்முறை எதிரணிகளின்பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு இப்பிரதேசத்தில் இருந்து கிடைப்பது உறுதியாகிவிட்டது.

No comments

Powered by Blogger.