முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல், அதிக பலத்தை மைத்திரி பெறமுடியாது
-இக்பால் அலி-
ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு மாகாண சபைகளின் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வடமேல் மாகாண சபையிலும் ஆட்சி மாற்றங்கள் நிகழலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. வடமேல் மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் மைத்திரி ஆதரிக்க முற்பட்டுள்ளனர். இந்த குழுவில் முன்னாள் வடமேல் மாகாண சபை அதுல விஜேசிங்கவும் இடம்பெறுகின்றார். அவரையே மீண்டும் முதல் அமைச்சராகத் தெரிவு செய்தவற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தற்போதுள்ள முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர தனக்கு பெருந்தொகையான ஆதரவு இருப்பதாக ஊடக அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் உள்ளனர். இவர்கள் தற்போதுள்ள எதிர்கட்சித் தலைவரும் மாவத்தகம ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான ஜே. சீ. அலவத்துவெல முதல் அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில் மாத்திரம்தான் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளனர் எனத் தெரிவிக்கின்றனர். அத்துடன் மேலும் பொதுவாக மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை விரும்புகின்றனர். ஆனால் மீண்டும் மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களை ஆதரிக்க வில்லை. மக்கள் ஐக்கிய தேசிய கட்சியே விரும்புகின்றனர். மீண்டும் வடமேல் மாகாண முதல் அமைச்சராக அதுல விஜேசிங்க இடம்பெறுவாராயின் இதற்கு தாம் ஆதரிக்கப் போவதில்லை. இந்த ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை விலகிக் கொண்டு எதிர்கட்சி சபையில் அமர்ந்து சேவையாற்று தற்போது சபை முதல்வருக்கு கடிதம் வழங்கியுள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆணியினரே ஆதரவு இல்லாமல் அதிக பலத்தை மைத்திரி அணி பெற்றுக் கொள்ள முடியாது என்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷh தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபையில் மொத்தம் 52 உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் தரப்பில் 37 உறுப்பினர்களும் எதிர் தரப்பில் 15 உறுப்பினர்களும் உள்ளனர். தற்போது இங்கு ஐக்கிய தேசியக் கட்சி அணி, மக்கள் விடுதலை முன்னணி அணி, ஆளும் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அணி, மைத்திரி அணி, சரத் பொன்சேகா அணி எனப் பல குழுக்கள் உள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரவளிக்க எடுத்த தீர்மானத்திற்கு ஏற்ப ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்த இரு உறுப்பினர்களும் விலகி எதிர் கட்சியில் இணைந்து கொண்டனர். அத்துடன் இன்னும் இரு உறுப்பினர்களான லக்ஷ;மன் மென்ரு மற்று அசோக வடிமங்காவ ஆகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியை விட்டு எதிர்கட்சியில் இணைந்து கொண்டார்கள். அதேவேளை புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி மாகாண உறுப்பினர் கிங்ஸிலி பெர்ணான்டோ மற்றும் சரத் பொன்சோகா அணியைச் சார்ந்த இருவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க ஆளும் தரப்பில் இணைந்து கொண்டார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மைத்திரியை ஆதரிப்பதற்காக தற்போது 10 உறுப்பினர்கள் நேற்று 13-01-2014 ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அணியைச் சார்ந்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரான அதுல விஜேசிங்கவை மீண்டும் முதலமைச்சாராக்க வேண்டும் எனக் கோரி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருவர் ஆதர வழங்குவார்களாயின் ஆட்சி மாற்றத்திற்காக 27 உறுப்பினர்களும் தயாசிரி ஜயசேகர அணியில் 25 பேரும் இடம்பெறுவர்
இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமை அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் வடமேல் மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் ஜே. சீ. அலவத்துவெல 40 மணி நிமிடம் தொலைபேயில் உரையாற்றியுள்ளார் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment