மைத்திரி + சந்திரிக்காவை ஆபாச மொழிகளால் பேசிய எஸ்.பி. க்கு சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக முன்னாள் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நிமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஆபாச மொழிகளால் சாடியிருந்தார்.
மேலும் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் ஆபாச மொழிகளால் பேசியிருந்தார்.
இந்நிலையிலேயே எஸ்.பி. திசாநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vi
தெருவில் நின்று குலைப்பதை தேடித்துரத்தி அடிப்பதைவிட சவ்வு இறைச்சியைக் காண்பித்து உள்ளே எடுத்தால் ஆசைதீர நையப்புடைக்கலாம்!
ReplyDeleteமேடம் படு ஸ்மார்ட் தெரியுமா?