Header Ads



இலங்கையில், உலகின் மிகப்பெரும் கார் உற்பத்தி தொழிற்சாலை

உலகில் இரண்டாவது கார் உற்பத்தி நிறுவனமான ஜெர்மனியின் வோக்ஸ்வேகன் நிறுவனம் இலங்கையில் தனது கார் ஏற்றுமதி உற்பத்தி தொழிற்சாலையை ஆரம்பிக்க திட்டமிட்டு வருகிறது.

இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவருக்கும் பொருளாதார ஊக்குவிப்பு அமைச்சர் ஹர்ச டி சில்வாவுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது இந்த கார் உற்பத்தி தொழிற்சாலை உட்பட பல பொருளாதார விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.

ஜேர்மனி வோக்ஸ்வேகன் கார் ஏற்றுமதி உற்பத்தி தொழிற்சாலையை இலங்கையில் நிறுவ பல வருடங்களாக முயற்சித்து வருவதுடன் சரியாக கூறமுடியாத காரணங்களினால் வெற்றிபெறவில்லை என ஜேர்மனிய தூதுவர் இதன் போது கூறியுள்ளார்.

ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் வீடுகளில் பொருளாதாரத்தை உயர்த்த உதவியாக அமையும் இந்த தொழிற்சாலையை திட்டம் குறித்து பேச புதிய அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

3 comments:

Powered by Blogger.