அஞ்ஞான் உம்மா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு
(தினகரன்)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஞ்ஞான் உம்மா முன்வந்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஞ்ஞான் உம்மா முன்வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மிகவும் பழுத்த முதிர்ச்சி பெற்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. இந்த நாட்டின் வரலாற்றில் உருவான ஜனாதிபதிகளில் மிகவும் ஜனரஞ்சகமானவர். அனைவரையும் எளிதில் கவரக்கூடியவர். சொல்வதைச் செய்பவர்.
கடந்த 30 வருட காலமாக இந்த நாட்டில் முடிவு காணப்படாமல் இருந்து வந்த கொடூர யுத்தத்தை துணிந்து செயற்பட்டு முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திக்கொடுத்தவர். அதில் அரசியல் ஆதாயம் தேட அவர் ஒருபோதும் விரும்பவில்லை. நாட்டை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் நாடு பாரிய அபிவிருத்தியைக் கண்டுள்ளது.
நாட்டு மக்கள் இன்று மிகவும் நிம்மதியாகவும் இன ஐக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன முரண்பாடுகளை ஒருபொழுதும் விரும்புவர் அல்ல. நாட்டை பிளவு படுத்தவும் அவர் விரும்பமாட்டார். வடக்கு தமிழர்களுக்கு என்றும் கிழக்கு முஸ்லிம்களுக்கு என்றும் பிரிக்கப்படுவதை நாம் ஒரு பொழுதும் விரும்பவில்லை.
இது நாட்டின் இன ஐக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மைத்திரிபாலவின் அசுத்தமான கூட்டில் முஸ்லிம் விரோதிகள் பலர் உள்ளனர். சம்பிக ரணவக எப்பொழுதுமே முஸ்லிம் விரோதி. நான் பாராளுமன்றத்திற்கு ஹிஜாப் அணிந்து சென்ற போது அதற்கு எதிராகப் பேசியவர்தான் இவர். இது மட்டுமல்லாது பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதைக்கூட தடுக்க முற்பட்டவர்தான் இந்த சம்பிக்க.
அத்துடன் சந்திரிகாவும் ஓய்வுபெற்றவர். இந்த அரியல் கூட்டுக்களால் எவ்வாறு நீண்ட காலம் பயணம் செய்வது இன்று நாடு சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்து செல்லுகின்றது. அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி அவரின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
உன்னை சொல்லி குற்றமில்லை.... மக்களை சொல்லி குற்றமில்லை... காலம் செய்த கோலமடி... விமல் வீரவன்ச (may be) செய்த குற்றமடி....!
ReplyDeleteஅஞ்சான் உம்மா அவர்களே, நீங்களும் அரசியல் செய்யத்தானே வேண்டும் பிரச்சினை இல்லை செய்யுங்கள் ... ஆனால் தயவு செய்து முஸ்லிம்களுக்கு சேதாரம் இல்லாமல் ( தலைவர் ஹகீமை போல்) செய்யுங்கள்..... . வாழ்த்துக்கள்.... இது தான் ஜனநாயகம்.
அஞ்ஞா உம்மா நீங்கள் மஹிந்தைக்கு வாக்குபோட சொல்லும் மன் உங்கள் தலையில் இருக்கம் ஹிஜாபை களட்டி விட்டு பேசுங்கள் அப்பதான் உங்களை பொதுபல சேனாவுக்கு பிடிக்கும் நீ முஸ்லிம் பெண் என்று சொல்லிக்கொண்டு முஸ்லிம்களை மஹிந்தவுக்கு வாக்கு போட சொல்றியே உன் சகோதர முஸ்லிம் பெண்களின் ஹிஜாபை கடந்த காலங்களில் இந்த அயோக்கியர்களால் களட்டும் போது எங்கு ஊர் சுத்த போனாய் உனக்கு பாவிக்க வேண்டிய சொற் பிரயோகங்கள் வேறு இது பொதுவாக எல்லோரும் பார்க்கும் இணையதளம் மரியாதயாக வாய பொத்திட்டு இரு ்்்்்்டி
ReplyDeleteஉங்களைப்போல சுரட்டைகளைத்தான் ஜனாதிபதி இன்னும் கவர்ந்துள்ளார். நீங்கள் யாரும் அவருடன் இருப்பதைப்பற்றி எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் பொது அறிவித்தல் விடுவது, மற்றும் மக்களிடம் அவரை ஆதரிக்கும்படி கேட்பது உமக்கு தேவையில்லாத விடயம். அஞ்சான் உம்மா ஒங்க வேலைய பாருங்க. கண்ட ( ) எல்லாம் அறிவித்தல் விடுமளவிற்கு போய்விட்டது நமது நிலைமை.
ReplyDeleteUmmah don't lie if you need any benefit from him or if he asked to say this.
ReplyDeleteUmmah, you didn't hear any news he and his brother supported to attack our Muslim.
ummah, do you know how it will be a disaster if he comes again as a president. people will be hopeless about country, safety and life. we may feel small Hitler reloaded.
Sorry, You are 'Angnana Umma'!
ReplyDelete