ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, ஒரு பகிரங்க கடிதம்...!
ஜனாதிபதி அவர்களே
இது 'ஜனாதிபதி' மகிந்த ராஜபக்ஷவுக்கு நான் எழுதும் கடைசிக் கடிதமாகும். ஏனென்றால் எதிர்வரும் 08ந் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அச்சமின்றி நேர்மையாக வாக்களிப்பதற்கு இந் நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமாயின் உங்களின் ஜனாதிபதி பதவிக் காலம் முடிய இன்னும் சில நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.
இன்னும் ஒருவகையில் கூறுவதாயின், நடைபெறவிருக்கும் இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கு மோசடிகள் நடைபெறக்கூடிய சந்தர்பங்கள் இனி சாத்தியமில்லை எனுமளவிட்கு இது ஒரு மக்கள் தேர்தலாக உருவெடுத்துள்ளது. இந் நாட்டின் அண்மைய தேர்தல் வரலாற்றில் இத்தகையதொரு புத்தெழுச்சி பெற்ற புரட்சிமிகு தேர்தல் நடைபெறவில்லை என்றுதான் கூறவேண்டும். உண்மையில் இதுவொரு எதிர்பாராத எழுட்சிமிகு முனேற்றமாகும்.
உண்மையில் உங்கள் மனசாட்சி சொல்லவது போல்இ பொது எதிரணியை சுற்றி முற்றிலும் எதிர்பாராத மக்கள் அலையொன்று பெருக்கெடுத்துள்ளது. இத்தகையதொரு மக்கள் அலைஇ புத்தெழுச்சி தம்பக்கம் அணிதிரளும் என்று பொது எதிரணியின் தலைவர்களோ தலைவிகளோ எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தற்போதைக்கு இந் நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். புள்ளடியிடுவது மாத்திரமே இனிமேல் அவர்களுக்கு எஞ்சியுள்ள வேலையாகும்.
உங்களின் கம்பீரமான ஆஜானுபாவ வசீகரமான தோற்றத்திற்கும் செயற்திறனுக்கும்இ பேச்சுத்திறனுக்கும், முகபாவனைக்கும் புன்னகைக்கும் வசியப்பட்டிருந்த மக்கள் திரளாக எதிரணியின் பக்கம் கூட்டு சேர்வதற்கான காரணம் என்னவென்று சிந்தித்து பார்க்க இன்னும் உங்களுக்கு நேரம் கிடைக்க வில்லையா? அல்லது வெளியில் சொல்ல முடியாதளவு உங்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதா ?
சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று உள்ளதா இல்லையா என்பது பற்றி மனோ தத்துவவியலாளரிடம் முன்வைக்கப் படவேண்டியதொரு கேள்வியாக உள்ளது. மக்களிளின் மீது அதிகாரத்தை பிரயோகிக்கும் பிரதான அரச இயந்திரங்களின் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் போன்றவர்கள் தமக்கு கீழுள்ளவர்களின் மீது மிகக் கொடுமையான கெடுபிடிகளை பிரயோகிப்பார்கள். சித்திரவதைகளை மேற்கொள்வார்கள். ஆனால் அதே வயதை ஒத்த அவர்களின் குடும்பத்தவர்களான தம் பிள்ளைகள் சகோதரர்கள். தாய்தந்தை உறவினர்கள் மீது அன்பு செலுத்தி ஆதரவளிக்கும் மனநிலையுடையவர்கள் என்றும் அறியமுடிகின்றது. ஆறுமில்லியன் யூதர்கள் உட்பட பத்துமில்லியன் பொதுமக்களை கொன்றொழிக்க கட்டளையிட்ட ஹிடலர் கூட தன் துணைவிக்கு அன்பு காட்டியுள்ளார். அதே போல் யுத்தகளத்தில் எதிரிகளையும், பொதுமக்களையும் நிராயுதபாணிகளையும் கொன்றொழிக்கும் சிப்பந்திகள் கூட தமது மனைவிமக்களுக்கு அன்புகாட்டி ஆதரவளிபார்கள்.
ஆகவே எத்தகைய கொடுங்கோலர்களுக்கும், கல்நெஞ்சக்காரர்களுக்கும் ஆழ்மனதில் ஈரமிருக்கும் என்பதை அறிந்துள்ளோம்.
ஆனால் நான் உங்களை ஹிட்லருக்கு சமப்படுத்தவில்லை. ஆனாலும் நானறிந்த வரை நீங்களும் ஒரு வகையில் சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியாளன் தான். உங்களைப்பற்றி சுருக்கமாக சொல்லப் போனால் இந் நாட்டில் நடைமுறையிலிருந்த ஜனநாயகத்தின் கடைசி சந்தர்ப்பத்தை கூட உபயோகித்து உங்கள் குடும்பத்தவர்களுக்கும்இ உங்களின் அடிவருடி சகாக்களுக்கும் ஏதுவான வகையில் நாட்டின் சட்டதிட்டங்களைகூட மாற்றியமைத்ததொரு சர்வாதிகார ஆட்சியாளன் நீங்கள்.
தற்போது உங்களுக்கு வந்திருக்கும் சந்தர்ப்பம் உங்கள் நெஞ்சில் உள்ள ஈரத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப் படவேண்டியதொரு தருணமாகும்.
ஜனாதிபதியவர்களே! இனி உங்கள் மனசாட்சிக்கு காதுகொடுங்கள். இதுபோன்றதொரு சந்தர்ப்பத்திற்கு முகம் கொடுக்கும் எத்தகையதொரு மனிதனும் முதலாவது செய்யவேண்டிய வேலையும் தமது மனசாட்சிக்கு செவிசாய்ப்பதாகும். உங்கள் மனசாட்சிக்கு செவிசாய்த்து செயற்படக் கூடிய எளிய சந்தர்ப்பமொன்றை உங்கள் முன் எடுத்து வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.
தற்போது நடைபெறும் உங்கள் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு கூட்டத்தை சேர்ப்பது பஸ்வண்டிகள் மூலமாகவென்று உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். 2005ம் ஆண்டில் உங்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு பஸ்வண்டிகளில் கூட்டத்தை கொண்டுவரும் தேவை உங்களுக்கு ஏற்படவில்லை என்பதையும் உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். ஆனாலும் தற்போதைய கூடங்களின் போது நீங்கள் மேடைகளில் இருந்து கத்துவதுஇ ''மிகப் பெரிய கூட்டம் எனக்காக வந்துள்ளார்கள்இ ஆகவே இத்தேர்தலில் நான்தான் வெற்றிபெறுவேன் 9ம் திகதியும் நான்தான் ஜனாதிபதி' என்று. அப்படி நீங்கள் மனசாட்சிக்கு எதிராக கத்தும் போதுஇ உங்கள் ஆழ்மனதிலிருந்து எழும் சப்த்தைத்தை நீங்கள் இன்னும் கேட்கவில்லையா ?. நீங்கள் அழைத்து வரும் இந்த மக்கள் கூட்டத்திற்கு தேவையான சாப்பாடுஇ மற்றும் குடிவகைகள்இ போக்குவரத்துக்கு தேவையான வாகன வசதிகளை ஏற்பாடு செய்து தராவிட்டால் இந்தக் கூட்டம் உங்கள் பேச்சுக்கு கரகோஷம் செய்யவும் ஆரவாரம் செய்யவும் ஒருபோதும் முன்வரமாட்டார்கள் என்பதை உங்கள் மனசாட்சி சொல்லித் தருவதை இன்னும் நீங்கள் செவி சாய்க்க வில்லையா.? இதை உளரீதியாக அறிந்த உங்களுக்கு ஒருவகையான சோகம்இ துக்கம்இ மனவருத்தம் போன்ற எதுவுமே ஆழ்மனதில் ஏற்படவில்லையா? ஆகக் குறைந்தது ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது என்பதையாவது உங்கள் மனசாட்சியிடம் இதுவரை நீங்கள் கேட்டு பார்க்கவில்லையா ?
இந்த நாட்டிற்கு விடுதலையை பெற்றுத் தந்ததாக சொல்லப் படும் உங்களுக்காக வோட்டு சேர்ப்பதற்காக உங்கள் கையொப்பமிட்ட குறைந்த விலையிலுள்ள மலிவான கைக்கடிகாரங்களை இந் நாட்டு மக்கள் மத்தியில் வினியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள போதும்இ உங்கள் உருவம் பொறிக்கப்பட்ட நாட்காட்டிகளை பொகட்கலண்டர்களை வினியோகிக்கும் போதும் ஒருவகையான சோகம் உங்களை சூழ்ந்து கொள்ள வில்லையா ? குறைந்த்தது உங்களுக்கு ஒரு சிறு கோபம்கூட வரவில்லையா ?
சிறு தொகை வாக்குகளை சேகரிப்பதற்காக வேண்டி இந்தியாவிலிருந்து வரவழைக்கப் பட்ட சல்மான் கான் மற்றும் ஓர் கவர்ச்சியான இளநடிகை ஜாக்குலின் உடன் சேர்ந்து பொரளை பாதைவழியாக நடந்துவந்த உங்கள் முகத்தைக் காண........ அயய்யோ ! ஒரு அரசியல் பிச்சைக் காரனின் முகத்திற்கு சமமாக இருந்ததே ......!
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக வேண்டி 1990 களில் நாங்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்திய அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை எமது கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் எவ்வளவு பெரிய மாற்றங்கள். வரலாறு உங்களைக் கணிக்கப் போவது உங்களின் அந்த அருமையான இறந்த காலத்தை வைத்து அல்ல. இலங்கை திரு நாட்டின் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தை நாசமாக்கிய உங்களின் ஜனாதிபதி பதவிக் காலத்தை வைத்ததாகும். இன்று பொது எதிரணியினரின் தேர்தல் மேடைகளில் வெற்றி முழக்கங்களோடு எழுதப் படுவது உங்கள் மீதான வரலாற்றுத் தீர்ப்பாகும்.
பாருங்கள், உங்களுக்கு முன்னால் இந் நாட்டை ஆட்சி செய்த எந்த வொரு ஜனாதிபதியும் அல்லது பிரதமரும் தம் பிள்ளைகளை அரசியலுக்கு அழைத்து வந்து பிள்ளைகளுக்காக ஒரு அரசியல் படையணியை உருவாக்கிக் கொடுத்து அவர்களை அராஜக அரசியலில் ஈடுபடுத்தியுள்ளார்களா ?. நாமல் ராஜபக்ஷவினால் வழிநடத்தப் படும் நீலப் படையணிஇ அரச உடமைகளை முறைகேடாக பாவித்துஇ நாட்டில் ஜனநாயக ரீதியில் செயற்படும் மாற்று கருத்துக் கொண்ட அரசியல் குழுக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது போன்ற வரலாற்றைக் கொண்ட எந்தவொரு அரசியல் தலைவரினதோ தலைவியினதோ பிள்ளைகளை உங்களால் இந் நாட்டில் சுட்டிக் காட்ட முடியுமா? அனுரபண்டாரநாயக இ சஜித் பிரேமதாசஇ ரவிஜயவர்தன போன்ற எவரும் எதிர்தரப்பு அரசியல்வாதிகளை அடக்குவதற்காக ஒரு படையணியை உருவாக்கி செயற்படவில்லை.
இலங்கை திருநாட்டிற்கு நீங்கள் விட்டுச் செல்லும் முன்னுதாரணமான அரசியல் வாரிசு ' நாமல் ராஜபக்ஷ' என்றால்........ ஐயகோ ! அது எத்தகையதொரு கைசேதமாகும் !? தங்களின் மனோ இச்சைகளை தீர்பதற்காக வேண்டி, எமது பௌத்த உயர்பீட சங்கைக்குரிய மல்வத்து இ அஸ்கிரிய மதகுருமார்களின் வேண்டுதல்களை கூட உதாசீனப்படுத்தி கண்டி மாநகரில் நாமல் ராஜபக்சவால் நடத்தப்பட்ட மோட்டார் வண்டியோட்ட போட்டிகள் மூலம் ஹைட்டி ராஜ்ஜியத்தின் இளம் சர்வாதிகாரியான 'பேபி டோக்' கினால் அந்த நாட்டிற்கு பெற்றுத் தந்த கொடிய ஆட்சியையே நினைவு கொள்ளச் செய்கின்றது. ' பேபி டோக்' க்கும் அராஜக படையணியொன்று இருந்தது. பிள்ளைகளை உணவாக உட்கொள்ளும் ஒரு பேய் கடவுளின் பெயரான ' தொன் தொன் மெகூன் ' என்று அவ் அராஜக படையணிக்கு பெயரிட்டிருந்தார்கள்.
17 வருட ஐ தே க ஆட்சிக்கு பின் 1994ம் ஆண்டு நடத்தப் பட்ட ஜனாதிபதி தேர்தல்களின் போது நாங்களும் ' அச்சம் தெளிந்து முன்வருவோம் ' எனும் தொனிப்பொருளில் வீதி நாடகங்களுடன் நாடெங்கிலும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். ஆனாலும் எங்கள் மீது ஒரு கல்லெறி கூட நடத்தப் படவில்லை. எங்களுக்கெதிராக எவரும் கூச்சலிட்டு ஏளனப் படுத்த வில்லை. இன்று அடிவாங்கிய லக்ஷ்மன் விஜேசேகர அன்றும் எமது மேடைகளில் பாடல்களை பாடிவிட்டு பாதுகாப்பாக வீடு சென்றார். ஜெயதிலக பண்டாரவும் பாடல்களை பாடினார். இவர்களை தாக்க அன்றைய ஜனாதிபதி பிள்ளைகளின் எந்த வொரு படையணியும் வரவில்லை.
ஜனாதிபதியவர்களே ! ஆனால் இன்று எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று பாருங்கள் . யுத்த முடிவிற்கு பின் மீண்டும் திரும்பி பாருங்கள் என்றும்இ தர்மாஷோகவின் வழியை பின்பற்றுங்கள் என்றும் உங்களிடம் வேண்டப் பட்டதை நீங்கள் உதாசீனம் செய்தீர்கள். துரதிர்ஷ்டவசமாக இப்போது அந்த சந்தர்ப்பம் மீண்டும் வரும் போது உங்கள் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
ஆகவே நீங்கள் உங்கள் சுயமதிப்பீட்டிற்கு செவிசாய்க்க வேண்டிய தருணம் உங்களுக்கு முன் தற்போது வந்துள்ளது.
அரசியல் அதிகாரம் நிரந்தரமானதல்ல. அதிலிருந்து ஓய்வு பெறவேண்டிய தருணம் வரும்போது அமைதியாக விட்டுச் செல்லும் மனப்பான்மை ஜனநாயக பண்பின் ஒரு முக்கிய இலட்சணமாகும். இப்போது நீங்கள் செய்யவேண்டிய முக்கிய வேலை, பொதுமக்களின் சுதந்திர தேர்தல் முடிவுகளுக்கு மக்களின் ஜனநாயக ரீதியிலான விருப்பத்திற்கு செவிசாய்த்து ஜனவரி 09ந் திகதி அமைதியாக அதிகாரத்தை கையளிப்பதாகும். ஆகக் குறைந்தது நகர்ந்துக் கொண்டிருக்கும் இறுதி தருணத்திலேனும் ஜனநாயக மரபுகளுக்கு தலைசாய்க்கவும். அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமோ கள்ளத்தனமாகவோ தொடர்ந்தும் அதிகாரத்தில் தங்கியிருக்க முயற்சி செய்ய வேண்டாம். வரலாறு உங்களுக்கு தீர்பளித்துவிட்டது. அதற்கு தலை சாய்க்க தயாராகுங்கள்.
ha what a letter, we are expecting many brilliant letters like this.
ReplyDeleteSuperb. .
ReplyDeleteஇனிமையான கருத்துக்கள் மனிதநேயம் கொண்டவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் பாராட்டுக்கள்
ReplyDeletemasha allah its a nice latter......
ReplyDelete