Header Ads



'மாடுகள் வெட்டப்படுகின்றமை' பாதுகாக்கும் செயற்பாடு மைத்திரி யுகத்தில் நடைபெறும் - ஓமல்பே சோபித தேரர்

நாட்டில்  மாடுகள் வெட்டப்படுகின்றமை மற்றும் நாட்டு மக்களை பால் மாபியாவிலிருந்து பாதுகாக்கின்ற செயற்பாடுகள் மைத்திரி யுகத்தில் நடைபெறும் ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

வெட்டுவதற்கு வைத்திருந்த 108 மாடுகளை மீட்டு அவற்றை உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு நேற்று அம்பலாந்தோட்டையில் இடம்பெற்றது. இதன்போது பால் இறக்குமதியை நிறுத்துவதற்கும் தாம் நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. தாய்ப்பால் குழந்தைக்கு அதை பிரிதொருவர் குடிக்க முடியாது அது முறையுமல்ல. அதைப்போன்றுதான் பசுவின் பால் கன்று குடிப்பதற்கு அதனுடைய குட்டிக்கு குடிப்பதற்க்கு அதை மனிதர் குடிப்பது எந்த விதத்தில் ஞாயம். மாடு சாப்புடுவது தடுக்கப்பட்டதென்றால் அதனுடைய பால் குடிப்பது எந்த விதத்தில் ஞாயம்.

    ReplyDelete
  2. மாடுவெட்டுரது,மைர்வெட்டுரது,எல்லாம் சட்டப்படி செய்தால் தப்பு கிடையாது.

    ReplyDelete
  3. ஆடு, கோழி, மீன், கருவாடு, மாசி போன்றவற்றையும் சேர்த்தே தடை செய்வது தானே நியாயம். மாட்டுக்கு ஒரு சட்டம், மற்ற உயிரினங்களுக்கு இன்னொரு சட்டம் என்றால்....... இதனை முதலில் செய்துவிட்டு அடுத்த கட்டமாக மரங்கள், செடி கொடிகள் வெட்டப்படுவதையும் தடை செய்யுங்கள். அவைகளும் உயிர் வாழ்கின்றனவே.

    ReplyDelete
  4. தாயிடம் சுரக்கும் பால் அது ஈன்றெடுக்கும் குட்டிகளுக்கே சொந்தமானது. எல்லா உயிரினங்களுக்கும் அது பொதுவானவையே. ஒரு தாய் குழந்தை பிரசவித்தால் தாய்ப்பாலை வழங்குவது குழந்தைக்கே. ஆடு குட்டி ஈன்றால் ஆட்டுக் குட்டிகளே தாயிடம் பால் குடிக்கும். நாய், பூனை...... என எல்லா உயிரினங்களும் அதே நியதியையே பின்பற்றுகின்றன. எனவே பசுப்பாலையோ, அதன் மூலம் பெறப்படும் பால்மா, படர், சீஸ் போன்றவற்றையும் தடை செய்ய முன்வாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.