''மிஸ்டர் பிரபாகரன்'' என சந்திரிக்கா கூறியது, பௌத்தர்களின் உன்னதத்தை வெளிப்படுத்துகிறது - மங்கள
தனது ஒரு கண்ணை மாத்திரமல்ல உயிரையும் பறிக்க தருணம் பார்த்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை கூட கௌரவப்படுத்தி பெயர் குறிப்பிட்டதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சிங்கள பௌத்தர்களின் உன்னத குணத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை தெவிநுவர நீல்வெல்லே பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஆங்கிலத்தில் உரையாற்றும் போது மிஸ்டர் பிரபாகரன் என கூறியிருந்தார்.
இதனை மாபெரும் தேசத்துரோக செயலாக காட்ட அரச ஊடகங்கள் முயற்சித்து வருகின்றன. இது குறித்து கருத்து வெளியிட்ட மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை ஒன்றுப்படுத்திய துட்டகைமுனு மன்னர், தன்னுடன் போரிட்டு இறந்த தமிழ் மன்னனான எல்லாளனுக்கு கல்லறை ஒன்றை கட்டியதுடன் அதன் அருகில் செல்லும் அனைவரும் அதற்கு மரியாததை செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்.
அவரது இந்த கட்டளை சிங்கள பௌத்தர்களின் குணத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த குணத்தை இன்றைய காலக்கட்டத்தில் வெளிப்படுத்தி தனது கண்ணை பறித்த தனது உயிரை பறிக்க முயற்சித்த பிரபாகரனை ஐயா என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Respectful former our srilankan president Santeria bandaranayaka she is a great one of families in srilanka n she I's a greater educators allso .so even enemy she is respecting others so I show is behavior v .good manner way .so threis nothing wrong .
ReplyDeleteமகிந்த அரசாங்கம் பெளத்த மக்களுக்கு இனவெறியை ஊட்டி வருகின்றது இதை பெளத்தர்களுக்கு உணரவைத்து அவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டுவரவேண்டியது பெளத்த புத்திஜீவிகளது தலயாய கடைமை அதுதான் சகல இன மக்களும் ஐக்கியமாக வாழ வழிவகுக்கும் நாட்டுக்கும் ஆரொக்யமான விடயம்.
ReplyDelete