Header Ads



வாழ்வா..? சாவா..?? இந்திய பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது..!

கிராமபுறங்களின் வாக்குகளை கொண்டு தேர்தல்களில் வெற்றியீட்டி வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இந்தமுறை பாரிய சவால் காத்திருப்பதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி முன்னதாக கிராமப்புற மக்கள் மத்தியில் மதிப்பை கொண்டிருந்தது.

எனினும் 1977ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய திறந்தபொருளாதார கொள்கைக்கு பின்னர் கிராமப்புற செல்வாக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியது.

இந்தநிலையில் 2005ஆம் ஆண்டு முதல் ராஜபக்சவின் வாக்கு வங்கிகளாக கிராமப் புறங்களே விளங்கின.

எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்.கட்சியின் ஒருவரான மைத்திரிபால சிறிசேன களமிறங்கியுள்ளமையால் குறித்த கிராமப்புற வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக பொலநறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களில் உள்ள விவசாய மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன எனவே ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இடம்பெறுவதாக தெ ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.