கொழும்பு துறைமுகத்தில் 87,000 கிலோ வெங்காயம் - துறைமுகம் முழுவதும் துர்நாற்றம்
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 87, 000 கிலோ பெரிய வெங்காயத்தை இறக்குமதியாளர்கள் துறைமுகத்திற்கு வெளியே கொண்டு செல்லாததால் துறைமுகத்திற்குள் துர்நாற்றம் வீசுகின்றது.
இறக்குமதியாளர்களால் கராச்சியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 6 கொல்கலன்களில் அடங்கிய 87,000 வெங்காயத்தை இறக்குமதியாளர்கள் கொண்டு செல்லாததால் துறைமுகத்திற்கு சேர வேண்டிய பல இலட்சம் ரூபா பணத்துடன் சுங்கத் திணைக்களத்திற்கு சேர வேண்டிய 10 1/2 இலட்சம் ரூபா வரிப்பணமும் இல்லாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
இறக்குமதியாளர்கள் கொண்டு செல்லாத இவ்வாறான கொள்கலன்களை சுங்க விற்பனை பிரிவினர் குறித்த துறைமுக அதிகார சபைக்கு விற்பனை செய்யும் உரிமையை கொடுத்து வரிப்பணத்தையும் துறைமுகக் கட்டணத்தையும் ஈடு செய்வது வழக்கம்.
இந்த கொல்கலன்களை விற்பனை செய்வதற்கான அனுமதியை சுங்க விற்பனை பிரிவினர் துறைமுக அதிகாரிகளுக்கு இதுவரை வழங்காமையினாலே இவை அழுகி துறைமுகத்திற்குள் துர்நாற்றம் வீசுகின்றது.
Post a Comment