வெலே சுதாவின் போதை வியாபாரத்துடன் 600 பெண்கள் தொடர்பு, ஏற்கனவே 300 பேர் கைது
இலங்கையில் பாரிய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வெலே சுதா என அழைக்கப்படும் வசந்த குமார என்பவரின் போதைப் பொருள் வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட சுமார் 600 பெண்கள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வெலே சுதாவின் மனைவியான கயனி அவரது சகோதரியான முத்து ஆகியோரும் இதில் அடங்குகின்றனர்.
வெலே சுதாவின் மனைவி மற்றும் தாயார் ஆகியோர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பல வருடங்களாக வெலே சுதாவின் ஹெரோயின் வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட 300 பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் உள்ள இந்த பெண்களுக்கு வெலே சுதா தினமும் உணவை விநியோகித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெலே சுதா கைது செய்யப்பட்டுள்ள போதிலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
Post a Comment