ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 5000 இளைஞர்கள், ஜிகாத் தாக்குதலை நடத்த திட்டம் - ஐரோப்பிய போலீஸ் ஏஜென்சி
ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 5000 இளைஞர்கள் சேர்ந்து ஜிகாத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. இது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ராப் வைன்வ்ரிக்த்ட் என்பவர் கூறியதாவது,
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த சுமார் 3,000, 5,000 பேர் வெளிநாட்டு போராளிகளாக சேர்ந்துள்ளதாக தெரிவித்தார். அவ்வாறு சென்ற இளைஞர்கள் திரும்பி வந்தால் தங்கள் அது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறினார். நாட்டில் இருந்து சென்றவர்கள் திரும்பி வர சாத்தியம் இல்லை என்று நாங்கள் கருதவில்லை என்று வைன்வ்ரிக்த்ட் கூறினார். கடந்த வாரம் பாரிசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இதற்கு ஒரு உதாரணம் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவில் 9/11-ல் நடந்த சம்பவம் போல ஐரோப்பாவிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் ஆட்சேர்ப்பு கருவியாக பயன்படுத்துவது சமூக வலைத்தளங்கள் தான் என்றும் எனவே கூடுதலான கண்காணிப்பிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். தற்போதைய பயங்கரவாத அச்சுறுத்தல் அனைத்தும் இணையதள வழியில் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுமார் 2,500 சந்தேக நபர்களின் பெயர்களை பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு சேவைகள் இருந்து ஈரோப்போல் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று வைன்வ்ரிக்த்ட் கூறினார். இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டெ கேர்சோவ் தெரிவிக்கையில் சுமார் 3,000 ஐரோப்பிய மக்கள் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஜிஹாதிகளாக சேர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். சுமார் 30 சதவீத பயிற்சி பெற்ற இளைஞர்கள் தங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
Post a Comment