மோசடிகளுடன் தொடர்புடைய 50 பேர், நாட்டைவிட்டு தப்பியோட்டம்
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மோசடிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட 50 பேர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு பாரிய மோசடிகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரவிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் குற்றமுள்ளவர்கள் தப்பிச்செல்வதை தடுக்கும்; நோக்கில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி பாரிய மோசடிகளுடன் தொடர்புடைய முக்கியஸ்தர்களின் தகவல்கள் வானூர்தி நிலையப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment