Header Ads



ஏர் ஏசியா விமான விபத்து - 30 பேரின் உடல் கண்டெடுப்பு

ஜாவா கடல் பகுதியில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தில் இருந்து இன்று ஒரே நாளில் 21 உடல்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற மலேசியாவின் ‘ஏர் ஏசியா’ விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர்.

இதற்கிடையே, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 90-க்கும் அதிகமான கப்பல்களும், விமானங்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, கடலின் ஆழப்பகுதியில் தேடும் பணிகளுக்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 21 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 30 உடல்கள் கடல்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய பலர் சீட் பெல்ட்களை அணிந்தபடி பிணமாக கிடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போர்னியோ நகர கடற்கரையோரத்தில் இருந்து சுமார் 1,575 கடல் மைல்களுக்கு உட்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாவா கடற்பகுதியில் சுமார் 5 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு உடல்கள் சிதறி கிடப்பதாக தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.