''கிழிந்த திரையில், கண்ட காட்சிகள்'' காட்சி -2
அரசியல் சந்தையில் தமிழ் தேசியக் கூட்டணி நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்ல கிராக்கி
தமிழ் தேசியக் கூட்டணி மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் சந்தையில் இப்போது நல்ல கிராக்கி நிலவுகின்றது. தலைக்கு 70 முதல் 100 மில்லியன் வரை (ஏழு முதல் பத்துக் கோடி) அவர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கினறது. என்றாலும் பணமா? பலிச் சொல்ல என்ற விடயத்தில் ஒரிவர் முடிவெடுக்க முடியாது திண்டாடுவதாகவும் தெரிகின்றது. எனவே தெற்கு நாடாளு மன்ற உறுப்பினர்களை விடவும் கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்ல கிராக்கி இருப்பதாகத் தெரிகின்றது.
காற்றில் பறந்தமு.கா. பையத்
யாரை ஆதரிப்பது என்ற விடயத்தில் எண்ணற்ற தடவைகள் கூடிக்கலைந்த மு.கா. கடைசியில் தட்டுத்தடுமாறி விரும்பியும் விரும்பாமலும் ஒரு தீர்மானத்திற்கு வந்தது. அந்தத் தீர்மானத்தில் கட்சியின் முக்கிய நிருவாகிகள் உறுதியாக இருப்பார்களா என்ற விடயத்தில் தலைவருக்கு வழக்கம்போல் சந்தேகம் இருப்பதால் முஸ்லிம் மார்க்கப் பெரியார்கள் முன்னிலையில் சத்தியம் (பையத்) செய்து கொண்டர்கள்.
இந்த சத்தியத்தைக்குப்பையில் தூக்கி எறிந்து விட்டு, அந்தக் கட்சி மக்கள் பிரதிநிதிகள் தற்போது மஹிந்த ராஜபக்ஷவின் மேடையில் தோன்றி சத்தியப் அதற்கு முறனாக காரியம் பார்த்து வருகின்றார்கள்.
8ம்திகதி வடக்கு,கிழக்கில் நெருக்கடி நிலை- ராஜித
தற்போதுள்ள நிலையில மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தத் தேர்தலில் தோல்வியில் இருந்து தப்புவதற்காக ஒரே வழி வடக்கு கிழக்கு மாகாணங்களில் மைத்திரிக்கு விழுகின்ற பெரும் எண்ணிக்கையான வாக்குகளைத் தடுப்பது மட்டுமே, எனவே இதற்காக அவர்கள் அங்கு வன்முறைகளை ஏற்படுத்தவும் பின்நிற்க மாட்டார்கள். இது விடயத்தில் நாங்கள் தேவையன இடங்களை தெளிவு படுத்தி இருக்கின்றோம் எனவே மக்களும் வளிப்புடன் இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைசச்ர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கின்றார்.
கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களை மோத விடுவதற்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களைப் பொலிஸார் வெள்ளிக் கிழமை கொழும்பில் கைப்பற்றி இருப்பது இதன் பின்னணியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
குற்றம் செய்தால் எனது பிள்ளைக்கும் சிறைக் கூடம்தான் இருப்பிடம்-சந்திரிகா
என்னுடைய பிள்ளைகளுக்கும் நான் சொல்லி வைத்திருக்கின்றேன். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் சிறைக்கூடங்களில்தான் காலத்தைக் கடத்த வேண்டி வரும் என்று, அந்த நிலை வந்தால் ஒரு தாய் என்ற வகையில் சாப்பாட்டுப் பார்சல்களைக் கொண்டு வந்து தருவேன்.நல்லதொரு சட்டத்தரணியையும் ஏற்பாடு செய்து தருவேன். இதனைத்தான் எனக்கு செய்ய முடியுமாக இருக்கும். இப்படிக் கூறுகின்றார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டரநாயக்க குமாரணதுங்ஹ.
சட்டத்தரணி சங்கத்தின் பகிரங்க விவாதத்தை மைத்திரி ஏற்றார்!
சட்டத்தரணிகள் சங்கம் மஹிந்த - மைத்திரிக்கு விடுத்த நேரடி விவாதத்திற்கான அழைப்புக்கு மைத்திரி தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைத்திருக்கின்றது என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஜயசூரிய தெரிவிக்கின்றார். தமது வேண்டுகோளுக்கிணங்க ஜனவாரி 5ம் திகதி 8ம் மணிக்கு இந்த நிகழ்வில் கலந்து கொள்ள பொது வேட்பாளர் மைத்திபால தயாராக இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பிலிருந்து கூடிய விரைவில் பதில் கிடைக்கும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
மஹிந்த கோட்டைக்குள் வந்த மைத்ரி - சஜித்துக்குப் பாராட்டு!
அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டைக்குள் தேர்தல் பரப்புரைகளுக்காக பொது வேட்பாளர் மைத்திரி சென்றிருந்தார். மிகவும் வெற்றிகரமாக ஹம்பாந்தோட்டை- பெலியத்த,தங்காலை, திஸ்ஸமஹராமை ஆகிய இடங்களில் இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தமைக்காக தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார் மைத்திரி. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டைக்குள் இந்தளவு பாரிய பேரணியை கெடுபிடிகளுக்கு மத்தியினும் நடந்த முடிந்ததும் அதற்கு ஆச்சர்யப்படத்தக்க அளவில் மக்கள் வந்து கலந்து கொண்டதும் தெற்கில் மக்கள் மத்தியில் பரபரப்பதாக இப்போது பேசப்பட்டு வருகின்றது.
மன்னார் துறையப்பா ஜோசப் மைதிரியின் தலையில் கொம்பு தேடினார்-ஜோன்ஸ்டன்
அண்மையில் மன்னாருக்குப் போயிருந்த பொது வேட்பாளர் மைத்திரி, துறையப்பா ஜோசப்பை சந்திக்கவும் மடுத் தேவாலயத்திற்கும் போயிருந்தார். அப்போது மன்னார் பிஷோப் துறையப்பா ஜோசப் மைத்திரியின் தலையைத் தடாவிப் பார்த்திருக்கின்றார்.
மைத்திரியின் தலையில் கொம்புகள் ஏதாவது முளைத்திருக்கின்றதா என்று தடாவித் தேடிப் பார்த்திருக்கின்றார் பிஷோப் துறையப்பா. இப்படி ஒரு கதையை பிஷோப்பைச் சம்பந்தப்படுத்திச் சொல்லி இருக்கின்றார் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ.
பொத்துவிலில் குடியேறத் தயாராகும் ஸ்ரீ.ல.மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்?
மைத்திரி வெற்றிபெற்றால் நிச்சயம் புதிய அரசியல் யாப்பு என்று உறுதியாகி இருக்கின்ற நிலையில், அரசியல்வாதிகளும் வரப்போகும் அரசியல் யாப்புக்கேட்ப தமது கூடாரங்களையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கும.;- இருக்கின்றது. நமக்குக் கிடைத்த ஒரு தகவல்படி தொகுதி அடிப்படையில் தேர்தல் என்றால் களமிறங்க மு.கா தலைவருக்கு ஒரு தளம் தேவை. இதன் அடிப்படையில் தற்போது பொத்துவில் தொகுதி மீது தலைவரின் பார்வை திரும்பி இருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றது.
கிழக்கில் ஏதாவது ஒரு இடத்தில் நீந்தித்தான் அடுத்த தேர்தலில் கரைசேர வேண்டிய நிலை தலைவருக்கு. அப்படி வந்து அரசியல் எதிரி அதாவுல்லாவையும் ஒரு பிடிபிடிகலாம் என்று மு.கா. தலைவர் எண்ணுகின்றார் போலும். எல்லாம் மைத்தி வென்று 100 நாள் அவர் போடும் திட்டத்தில்தான் முடிவு தங்கி இருக்கின்றது.
வடக்கில் ராஜபக்ஷவுக்கு அதிக வாக்கு சேர்க்க மண்டையை உடைத்து திட்டம் போடும் கூட்டம்
அண்மையில் வடக்குபோயிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எப்படியோ ஆளை வளைத்துப் பிடித்துக் கூட்டம் போட்ட ஆளும் தரப்பினரும் வடக்குஆளும்தரப்புப்பங்காளிக் கட்சிகளும் எப்படியோ அந்த விடயத்தில் படாத பாடு பட்டு காரியத்தை முடித்திருக்கின்றது.
இப்போது8ம் திகதி எப்படி வெற்றிலைக்கு வாக்குச் சேர்த்துக் கொடுப்பது என்ற விடயத்தில் மண்டையைப்போட்டு உடைத்துக் கொண்டு இப்போது திட்டங்களை தீட்டிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் நேராக சிந்திப்பதை விட குறுக்காகவே அவர்களின் கவனம் இருப்பாதாக அந்த வட்டாரங்கள் மேலும் தகவல்களைச் சொல்லுகின்றன.
நுவரெலியாவில் சேவல்கள் கூண்டில் என்றுமில்லாத ஒருவகைக் களக்கம்!
2015 ஜனாதிபதித் தேர்தல் வழக்கம் போல் குளிர்ந்து போயிருக்கின்ற நுவரெலியாவையும் இந்த முறை விட்டு வைக்கவில்லை. அங்கும் அரசியல் அரங்குகளில் அணல் தெரிக்கின்றது. தனிக் காட்டு ராஜவாக மலை முகடுகளில் வலம் வந்து கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சீனியர் மறைவுக்கு பின் சின்ன பின்னமாகி அங்காங்கே மலை முகடுகளில் இந்திய வம்வசா வலிகள் சமத்திருக்கின்ற சிற்றரசுகள்.அவற்றிக்கிடையே இப்போது ஆதிக்கப் போட்டி.
ஜூனியர் மாவட்டத்தை வென்று தருகின்றேன் என்று பெரியவருக்கு உறுதி கொடுத்தாலும் மலைச்சாரல்களின் கதை அப்படி இல்லாதிருப்பதால் அங்கு இப்போது ஒருவகை களக்கம் என்று தெரிகின்றது.
கலநிலரத்தை அறிய ஆவலாய் உள்ள எங்களுக்கு நல்லதொரு தொகுப்பு மிக்க நன்றி திரு. நஜீப் பின் கபூர் அவர்களே.
ReplyDelete