Header Ads



'கிழிந்த திரையில், கண்ட காட்சிகள்' காட்சி -1

(நஜீப் பின் கபூர்)

மஹிந்த-மைத்திரி சார்பில் தலா 100 கோடி பந்தயம்

இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாகக் கருதப்படுகின்ற 2015 ஜனாதிபதித் தேர்தலில் இந்த முறை வரலாற்றில் மிகப் பெரிய பந்தயமும் கட்டப் பட்டிருக்கின்றது.கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இதற்கான பந்தயத்தை சட்டத்தரணிகள் முன் கட்டி இருக்கின்றார்கள் இந்த நாட்டிலுள்ள மிகப் பெரிய வர்த்தகப்பிரமுகர்கள் இருவர். 

இவர்கள் இருவரும் பிரபால ஹோட்டல்களுக்குச் சொந்தக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர கோடி, மில்லியன் கணக்கில் பந்தயங்கள் தாராளமாக நடந்து கொண்டிருக்கின்றது இதிலிருந்து தேர்தலில் கடுமையான போட்டி என்பது உறுதியாகின்றது.

மஹிந்த வெற்றிக்காக சிங்களவர்கள் ஓரணி சேர வேண்டும்-நௌசர் பௌசி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதானால் சிங்களவர்கள் அனைவரும் இந்த முறை தேர்தலில் ஓரணி திறள வேண்டும் இப்படி சிங்கள மக்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றார் சிரேஸ்ட அமைச்சர் பௌசியின் மகனும் மேல் மாகாணசபை உறுப்பினருமான நௌசார் பௌசி. அத்துடன் எல்லோரும் ராஜபக்ஷவை விட்டு ஓடிக் கொண்டிருக்கும் போது தனது தந்தை கடைசிவரையும் ராஜபக்ஷாவுக்காக உழைப்பார் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

அறியாத தெய்வத்தை விட தெரிந்த பேய் மேலானது யாழில்-ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை வடக்கில் தனது தேர்தல் பரப்புரைகளை வெற்றிகரமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடாத்தி இருந்தார். யாழ்ப்பாணத்தில் பேசுகின்ற போது மைத்திரியை நீங்கள் பார்த்திருக்கின்றீகளா என்று கூடி நின்ற மக்களிடத்தில் கேள்வி எழுப்பினார். அத்துடன் தெரியாத தெய்வத்தை விட தெரிந்த பேயுடன் அச்சமின்றி காரியம் பார்க்கலாம் என்று அவர் அங்கு குறிப்பிட்டார். 

அத்துடன் மன்னாருக்குப் போன ராஜபக்ஷ இங்கிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் இன்று கோடிஸ்வரார்களாகத் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நூற்றுக்கணக்கான ஏக்கர் அரச நிலைங்களை அவர்கள் கைப்பற்ற முனைந்ததை நாம் தடுத்தால் இன்று அவர்கள் எம்மிடமிருந்து விழகிப்போய் மைத்திரி அணியில் சேர்ந்து இருக்கின்றார்கள். அவர்களை மக்கள் தமது தலைவர்களாக கருதிக் கொண்டு ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

ஜனாதிபதி வெற்றிபெற்றால் எட்டு வருடங்கள் பதவி வகிப்பார்-மைத்ரி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றால் எட்டு வருடங்கள் அவர் ஆட்சியைத் தொடர்வார் எனவே மீண்டும் சர்வாதிகாரம், குடும்ப ஆதிக்கம், ஊழல் மோசடி என்பன இந்த நாட்டில் தலைவிரிதாடும். இந்த நாடு ஒட்டு மொத்தமாக சிரழிந்து போய்விடும் எனவே மஹிந்த ராஜபக்கஷ பிடியிலிருந்து இந்த முறை நாட்டை மீட்டெடுக்கின்ற பாரிய பணி இந்த நாட்டு வாக்காளர்களின் கரங்களில் இருக்கின்றது.

பெரும்பான்மை முஸ்லிம்கள் ஆதரவு ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கே -பௌசி

8ம் திகதி நடைபெறுகின்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதி அவர் வெற்றியை எவருக்கும் தட்டிப் பறிக்க முடியாது. கடைசி நேரம் வரை எல்லாச்சலுகைகளையும் வசதி வாய்ப்புக்களையும் அனுபவித்து விட்டு ரிஷாடும் , ஹக்கீமும் ஜனாதபதிக்கு துரோகம் பண்ணி ஆப்பு வைத்து விட்டார்கள். இது ஒரு அநாகரிகமான நடவடிக்கை. அவர்கள் எடுத்து தீர்மானம் முற்றிலும் சுயநல நோக்கம் கொண்டது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம், முஸ்லிம் காங்கிரஸூம் ஜனாதிபதியை விட்டுப் போனாலும் முஸ்லிம்கள் இன்னும் ஜனாதிபதிக்கு விசுவாசமாகவே இருக்கின்றார்கள். இப்படிக் ஊடகச் சந்திப்பில் நம்பிக்கை வெளியிடுகின்றார் சிரேஸ்ட அமைச்சர் பௌசி.

முஸ்லிம் கரையோர மாவட்டம் அரசதரப்பும் ஹக்கீமும் பல்டி!

அரச தரப்பிலுள்ள தலைவர்கள் சிறுபான்மை என்போர் பிரிவினை வாதிகள் என்ற விதத்தில் தற்போது தமது தேர்தல் பரப்புரைகளை முடக்கி விட்டிருக்கின்றார்கள் என்று மு.கா.தலைவர் தற்போது ஆளும்தரப்பு முக்கிஸ்தர்கள் மீது சாடுகின்றார். 

இதற்குப் பதில் கொடுக்கின்ற அமைச்சர் ஜோன் செனவிரத்தன  அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், சம்பாந்துறை, கல்முனை ஆகிய பிரதேசங்களை உள்வாக்கிய பிரதேசங்களுக்கு தனியான ஒரு மாவட்டச் செயலாளரைக் கேட்டார். அரசு அதற்கு உடன்பட வில்லை எனவே தனியான மாவட்டத்தையோ செயலாளரையோ கொடுக்க முடியாது என்று நாம் சொல்லி விட்டோம். அதனை மைத்திரி தருவதாகச் சொன்னதால் அவர் அங்கு போய் விட்டார் என்று குறிப்பிடுகின்றார் அமைச்சர். 

No comments

Powered by Blogger.