சிறுநீரக சிகிச்சைக்காக, வைத்திய உதவி நாடி நிற்கின்றார்
சாயந்தமருது -17 குத்தூஸ் வைத்திய வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய எஸ். ஏ. நளீறா என்ற பெண்மணி இரு சீறுநீரங்களும் பாதிக்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் இவருடைய உடல் நிலை பாதிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது எனவும் சமூக இணையத்தளங்களில் பதிவு செய்திருந்தோம், அல்ஹம்து லில்லாஹ் சுமார் 160000 ரூபா மாத்திரமே வெளிநாட்டிலுள்ள சகோதரர்கள் வங்கிக் கணக்கில் போட்டிருந்தார்கள். அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேவேளை இந்த நிதி உதவி இந்த மருத்துவச் செலவை போதியளவு ஈடு சேய்யக் கூடியதாக இல்லை. 35 இலட்சம் ரூபா இதற்காக செலவு செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் மதிப்பீடு செய்துள்ளார்கள். தற்போது கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையான கண்டி நேசிம் ஹோமில் அவசரமாக சிறுநீராக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எதிர் வரும் 28-01-2015 திகதி அளவில் இவருக்கான சத்திர சிகிச்சை இடம்பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே வறிய குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி உதவியை நாடி நிற்கின்றார். மனவமுந்து உங்களது பொருளாதார உதவியையும் பங்களிப்பையும் நல்லாதரவையும் துஆவையும் செய்யுமாறு வேண்டுகின்றோம்.
எமது தொலை பேசி இலக்கம் :- கணவன் 0770821285
கணக்ககு இலக்கம்
338-20012-0005010
மக்கள் வங்கி- சாய்ந்தமருது
யாரின் பெயரில் உள்ளது என்பதையும் அறிவியுங்கள். சில Bank களில் Account Holder இன் பெயரையும் அவசியம் பதிய வேண்டும்.
ReplyDelete