ராஜபக்ச கள்வர்கள் எனது 100 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்களை சூறையாடினார்கள் - லலித் கொத்தலாவ
-அஸ்ரப் ஏ சமத்-
சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவ சிறையில் இருந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பு
ராஜபக்ச கள்வர்கள் எனது 100க்கும் மேற்பட்ட பில்லியன் சொத்துக்களை சூறையாடினார்கள். என்னையும் சிறையில் அடைத்தார்கள் எனது செயலான் வங்கி, பினாஸ் கம்பணிகளை பறித்தெடுத்தார்கள். அவர்களது ஆதரவாளர்களை அவ் கம்பணிகளின் தலைவர்களாக நியமித்தார்கள். கொள்ளுப்பிட்டியில் ரண்முத்து ஹோட்டலுக்கு அருகில் நான் கொண்டுவந்த ஹாயத் ரீஜென்சி கோட்டலுக்காக 10 பில்லியன் முதலிட்டேன். அதனையும் பசில் ராஜபக்ச தனது பெயருக்கு மாற்றியுள்ளார். என சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவா தெரிவிப்பு.
எனக்கு உண்மையில் கோல்டன் கீ பண முதலீட்டில் 26 பில்லியன் நஸ்டம் ஏற்பட்டது. உண்மை முதலிட்டவர்களுக்கு 3 வருடத்திற்குள் பணம செலுத்துவதாக தெரிவித்தும் 200 மில்லியன் ருபா செலுத்தியுள்ளேன். அதில் முதலிட்டவர்களோ அல்லது கம்பணிக்கோ பிரச்சினை இல்லை எனது கம்பணிகளையும் பணங்களையும் சூரையாடுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் தலைவர் மற்றும் ராஜபக்ச சகோதரர்களுக்கே மிக ஆர்வம் இருந்தது.
எனக்கு 450 சிலின்கோ சம்பந்தமான கம்பணிகள் 45ஆயிரம் ஊழியர்கள், வெளிநாட்டில் 15 கம்பணிகள் உள்ளன. ஆனால் கோல்டன் கம்பணியில் தான் 13 பில்லியன் நஸ்டம் ஏற்பட்டது. என சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவ தெரிவித்தார்
Post a Comment