Header Ads



ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக, உழைத்தவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்

தற்போது நாடு ஒரு ஜனாதிபதி தேர்தலை முன்னோக்கி இருக்கின்றது, கடந்த இரு தசாப்தங்களாக நாட்டை ஆண்டு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுகக்கு இது ஒரு சவால் மிக்கதான தேர்தல் களமாகவே காணப்படுகின்றது. கட‌ந்த காலங்களில் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழந்து வெறும் பெரும்பான்மை மக்களது வாக்கு வங்கியில் மட்டுமே தங்கியிருக்க வேண்டிய ஒரு சூழ் நிலையை அரசு எதிர் நோக்கி வருகின்றது.  ஆனாலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசானது மீண்டும் மீண்டும் சிறுபான்மையினரை இலக்கு வைத்து அதன் வன்முறை கும்பல்களை ஏவிவிடுவதானது அவர்களது அரசுக்கு பாதகமாக அமையும் என்பதை அவர்கள் ஏனோ உணர்கின்றார்கள் இல்லை.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைக்கு அடிகோளிய ஊவா மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக உழைத்த பல சிறுபான்மை மக்களை இலக்குவைத்து சில பாதாள உலக குழுக்கள் செயல்படுவதாகவும், அவர்களை ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாத வகையில் முடக்குவதே அவர்கள் பிரதான இலக்கு என்பது தெரிய வருகின்றது. ஊவா மாகாண சபை எதிர் கட்சி தலைவரின் ஆதரவாளர்கள் இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக சிலர் போலீஸில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

உக்குவலையை பிறப்பிடமாக கொண்ட ஒரு இரத்தினக்கல் வர்த்தக பிரமுகருக்கு இவ்வாரான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிட்ட போதும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமையினால் அவர் தம் உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக மலையக தகவல்கள் தெறிவிக்கின்றன. இன்னும் பலர் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும். அவர்க்ளது குடும்ப அங்கத்தவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிகிறது. பொலீஸில் முறையிட்ட பிறகு பிரச்சனைகள் அதிகரிப்பதனால் பலர் பொலீஸை அனுகவும் தயங்குவதாக தெரிகின்றது.

அன்மைக்காலத்தில் பேருவலையில் நடைபெற்ற இன முறுகல்கள் காரணமாக ஆளும் தரப்பு சிறுபான்மையினரின் ஆதரவை முற்றுமுழுதாக இழந்துள்ள நிலையில் இவ்வாரான நிகழ்வுகள் ஆங்காங்கு நடப்பதானது அரசின் ஆதரவு இன்னும் இன்னும் குறைந்து வருவதாக அரசிலுள்ள சிறுபான்மை இன தலைவர்கள் குறைபட்டு கொள்கின்றார்கள். இவ்வாரான செயல்களை நிறுத்தும் படியும் தங்களுக்கு தங்களது மக்கள் முன்னிலைக்கு செல்ல முடிவதில்லை என்று அவர்கள் அரசிடம் பல வேண்டுதல்கள் விடுக்கப்பட்ட போதும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருப்பதாக அவர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்

1 comment:

  1. azathandaa naangalum solraam anda wenna. awwwalawu sonnam racism wendaaam BBS i ban pannund solli,,,,ippa pothikkuttu uuttukkaawi iru..

    ReplyDelete

Powered by Blogger.