மைத்திரிபால படுதோல்வியடைய, நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் - எஸ்.பி.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த தரப்பும் தமது உச்சப்பட்ச ஆதரவை வழங்கவில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி பாடுபட்ட வேலை செய்வதில்லை. ஜே.வி.பி அவருக்கு ஆதரவாக எதனையுமே செய்வதில்லை.
ஓரமாக இருந்து ஆதரவை வழங்கி வருகிறது. ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து சென்றவர்களில் இரண்டு பேரை தவிர ஏனைய அனைவரும் அரசாங்கத்திற்கு திரும்பினர்.
கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியது.
இம்முறை அந்த கட்சியினரும் பொது வேட்பாளருக்காக தேர்தல் பணிகளை செய்வதில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கின்றது. கடந்த முறை முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளருக்கு கடுமையாக உழைத்தது.
இம்முறை அவர்களும் இல்லை. இதனால், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக சந்திரிக்கா மாத்திரமே இருக்கின்றார்.
இதனால், பொன்சேகாவை விட மைத்திரிபால படுதோல்வியடைய நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாகரீகம் தெரியாத இவனெல்லாம் கல்வி அமைச்சர், மகிந்தவின் ரவுடி தர்பாரில் இதுபோன்ற பக்கிகள்தான் அதிகம்.(முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரை நிர்வாண நிலையில் விரட்டி அடிக்கவேண்டும் என்று சொன்னதை சொல்கின்றென்.)
ReplyDelete