Header Ads



சிறுபான்மை மக்களோ, அவர்களின் கட்சிகளின் ஆதரவோ எமக்கு தேவையில்லை - அமைச்சர் மகிந்த யாப்பா

சிறுபான்மை மக்களின் வாக்குகளோ அல்லது ஆதரவோ எமது ஜனாதிபதிக்கு தேவையில்லை  என அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

நிறைவேற்று அதிகாரத்தை கொண்டே யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தோம்.

தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஈழ கனவை நனவாக்க கங்கணம் கட்டி கொண்டு இருக்கின்றது. வெளிநாட்டு சக்திகளும் ஊடுருவப்பார்க்கின்றது. இதற்கு உதாரணமே வட மாகாண சபையில் செங்கோல் வீசி எறியப்பட்டது.

யுத்தம் முடிந்தாலும் பிரச்சினைகள் தீர்வில்லை. ஆகவே நிறைவேற்று அதிகார முறையை உடனடியாக நீக்கமுடியாது மக்களின் தேவைகளை நாம் நிறைவேற்றியுள்ளோம்.

சிறுபான்மை மக்களோ அல்லது அவர்களின் அரசியல் கட்சிகளின் ஆதரவோ எமக்கு தேவையில்லை அவர்கள் ஆதரவின்றி எம்மால் வெற்றி பெறமுடியும் என்று தெரிவித்தார்.

1 comment:

  1. சொல்லி வேலல்ல. சிங்களவர்களே மகிந்தவுக்கு ஆப்பு வைக்க ஆரம்பிச்சாச்சு. குடும்பமே ஆடிப்போய் இருக்கு. விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்ற போக்கு.

    அரசியல்வாதிகள் பலருக்கு தற்காலம் மண்டைக்குழப்பம் என்பது நன்றாக புரிகின்றது. நல்லவன் நேர்மையானவன் நல்ல முறையில் இருக்கின்றான். திருடன் ஏமாற்றுக்காறன் பைத்தியம்போல அலைகின்றான். லூசுங்க போல.

    ReplyDelete

Powered by Blogger.