Header Ads



பொதுபல சேனா மீதான, சிங்கள சகோதரர்களின் ஆதரவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி..!

- தஸ்னீம் ஜம்பி எஹலியகொட-

இலங்கை திரு நாட்டில் பலரும் பொறாமைப்பட்ட ஒரு இயக்கதித்தின்  வளர்ச்சி என்றால் அது பொது பல சேனாவின் வளர்ச்சி தான். பாமர பௌத்தர்களும் ஏன் படித்த பௌத்தர்களும் கூட அவர்களை சரி கண்டதை மறுக்க முடியாது. ஹலால் பிரச்சினை முதல் நானும் இவர்களின் பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன். முக்கியமாக முகநூல் பதிவுகளையும் அவற்றிற்கு இடும் பின்நூட்டல்களையும் ஒன்று விடாமல் படிப்பேன். சில இஸ்லாமிய சகோதரர்கள் மிகக்கேவலமான வார்த்தைகளை (இஸ்லாத்துக்கு இழுக்கு சேர்க்கும் வகையில்) பின்நூட்டல் இடுவதையும் ஆங்காங்கே கண்டதுண்டு. ஆனால் 90 வீதமான (ஏன் சில பதிவுகளில் 100 வீதமான என்று கூட கூறலாம்) பெரும்பான்மை சகோதரர்களின் பின்நூட்டல் இவ்வியக்கத்தை ஆதரிப்பதும் போற்றிப் புகழ்வதுமாகவே இருந்தது. அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொது பல சேனா அனைத்து பெரும்பான்மை உள்ளங்களையும் வென்று நாட்டையே புரட்டிப் போடப்பார்க்கிறார்கள் என்று தான் எண்ணத் தோன்றியது. அந்த அளவுக்கு அவர்களின் பின்நூட்டல்கள் பொது பல சேனா மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையை பாறைசாற்றுவதாகவும் ஆக்ரோஷத்தை கக்குவதாககவுமே இருந்தது.

எனினும் ஜனாதிபதித் தேர்தல் களம் நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் இந்த நேரத்தில் பொது பல சேனா மீதான பெரும்பான்மை சகோதரர்களின் ஆதரவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஒரு முக்கியமான மாற்றம் தான். சிறுபான்மையினருக்கு இது நிம்மதியை தரும் செய்தியாகவே தெரிகிறது. சென்ற மாதம் 27ம் திகதி பொது பல சேனா அரசாங்கத்துக்கான ஆதரவை பகிர்ங்கப் படுத்தியத்தை தொடர்ந்து பொது பல சேனாவை போற்றி பாராட்டியவர்களே தூற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

“காட்டிக் கொடுத்து விட்டீர்கள். ஏமாற்றி விட்டீர்கள். உங்கள் உண்மை முகம் தெறிந்து விட்டது. இனியும் எம்மை ஏமாற்ற முடியாது. சிங்களவர்களிடம் இனியும் வர வேண்டாம். உங்கள் துர்க்குணம் வெளிப்பட்டுவிட்டது. நாங்கள் என்றும் உங்களை மன்னிக்க மாட்டோம். விரைவில் அழிந்து விடுவீர்கள். உங்களது முடிவு மிக தொலைவில் இல்லை.” போன்ற பல கருதத்துக்கள் போற்றி புகழ்ந்தவர்களாலேயே வெளிப்படுத்தப்படுகிறது. இது அவர்களின் ஆதங்கத்தை வெளிக்காட்டுகிறது.  காலம் செல்ல செல்ல அவர்களின் ஆதிக்கம் இல்லாமலே போகும் என்பதை எதிர்பார்க்கலாம். எது நடந்தாலும் முஸ்லிம் சமூகம் விழிப்புடனேயே இருக்க வேண்டும். 

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’ (அல்-குர்ஆன் 3:54)

1 comment:

  1. ALHAMTHULILLAH . INSHA ALLAH 08.01.2015 GAME OVER

    ReplyDelete

Powered by Blogger.