Header Ads



மின்னல் ரங்கா விடம் ஒரு சில கேள்விகளும், சக்தி தொலைகாட்சியிடம் ஒரு வேண்டுகோளும்

(முஹம்மது றினாஸ்)

சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாரளமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா நெறிப்படுத்துகின்ற மின்னல் நிகழ்ச்சியானது இலங்கையின் தமிழ் பேசுகின்ற மக்களுக்கான ஒரே ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியாகும். இன் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் பேசுகின்ற மக்கள் அரசியல் தொடர்பான விளக்கங்களை பெற்று வருவது உண்மையே. இதில் மறுப்பேதும் இல்லை. 

இந்நிகழ்ச்சி ஜே. ஸ்ரீ ரங்கா அவர்களால் அவர் அரசியலுக்கு பிரவேசிக்க முன்னர் நடாத்தப்பட்டு பின்னர் ஜே. ஸ்ரீ ரங்கா அரசியலுக்கு பிரவேசித்த பின்னர் சிறுது காலம் இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதன் பிற்பாடு அநேக மக்களின் வேண்டுகோளின்படி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக சக்தி தொலைகாட்சி விளம்பரப்படுத்தி மீண்டும் மின்னலை ஆரம்பித்தது. 

மீண்டும் ஆரம்பித்த மின்னல் நிகழ்ச்சியினை இலங்கையின் பாரமன்றத்திற்கு தெரிவான ஜே. ஸ்ரீ ரங்கா வே இன்று வரை தொகுத்து வழங்கி வருகின்றார். இதுவே இங்கு பிரச்சினையாகும். 

இவ்வேளையில் மின்னல் ரங்காவிடம் சில கேள்விகளை கேட்க விளைகின்றேன். நான் ஏன் மின்னல் நிகழ்ச்சியில் (தொலைபேசி அழைப்பின் மூலம்) இதை கேட்காமல் இணைய தளங்கள் வாயிலாக கேட்கிறேன் என்பதற்கும் காரணம் உண்டு.
தொலை பேசி அழைப்பின் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்களிடம் மாத்திரமே கேள்விகள் கேட்க முடியும் நிகழ்ச்சி நடத்துகின்ற ஜே. ஸ்ரீ ரங்காவிடம் கேட்க முடியாது என்பதாலாகும். 

எனது கேள்விகள்.

வினா 01. ரங்கா அவர்களே நீங்களும் ஒரு அரசியல்வாதி அத்தோடு அரசாங்க தரப்பில் அங்கம் வகிக்கிற ஒருவர், நீங்கள் மற்றைய அரசியல் வாதிகளிடம் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக பல்வேறு வினாக்களையும் வியாக்கியானக்ளையும் முன்வைக்கிறீர்கள். 

உங்களிடம் நீங்கள் ஒரு அரசியல் வாதி என்றவகையில் ஏன் தொலைக்காட்சி விவாதங்களில் கேள்வி கேட்க இடமளிப்பதில்லை? ஒரு அரசியல்வாதியாக நீங்கள் எப்போது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போகின்றீர்கள்? 

வினா 02.  கடந்த வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நீங்கள் அன்றைய தினம் கொழும்பு பல்கலைகழகத்தின் வர்ண இரவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினீர்கள். அவ்வுரையில் நீங்கள் “ பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இடம்பெற்றுகொண்டிருக்கும் போது அதில் பங்கு பற்றுவதா அல்லது இதில் கலந்து கொல்வதா என நான் சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன் எனினும் அந்த இடத்தை விட இந்த இடமே சிறந்தது என நான் நினைத்தேன்“ (அச் செய்தி சக்தி தொலைகாட்சியில் 25.11.2014 8.00 pm ஒளிபரப்பப் பட்டது. ஒலிப்பதிவும் என்னிடம் உள்ளது.)
 
ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் முக்கிய தருணத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையாயினும் இவ்வாறனதொரு கருத்தை நீங்கள் சொல்லலாமா? இவ்வாறு கூறியது உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்த மிகப்பெரிய அநியாயம் இல்லையா?
 
வினா 03. சரி மின்னல் நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளராக நீங்கள் செயட்படுகிறீர்கள் என வைத்துக் கொள்வோமாயினும் ஒரு மணி நேர அந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட அரைவாசிக்கும் மேலான நேரத்தை நீங்களே எடுத்துக் கொள்கிறீர்கள். ஏனைய சகோதர தொலைகாட்சிகளில் நாங்கள் பல்வேறு அரசியல் நிகழ்சிகளை பார்கிறோம் (சிரச வில் சடன, ஹிரு தொலைகாட்சியில் பலய, தெரன தொலைகாட்சியில் வாதபிட்டிய, சுவர்ணவாகினியில் ரட்ட காட்டத,) அவ்வாறான நிகழ்சிகளில் நிகழ்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் இவ்வாறு அளவுக்கதிகமாக பேசுவதில்லை. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் வாதிகளுக்கே அதிக சந்தர்பம் வழங்குகின்றனர். 

நிகழ்ச்சி தொகுப்பாளராக செயட்படுகின்ர நீங்கள் ஏன் கேள்விகளை மாத்திரம் முன்வைக்காது பல்வேறு விவகாரங்களையும் பேசுகின்றீர்கள்? அவ்வாறு பேசுவதெனின் நீங்கள் அந் நிகழ்ச்சியில் அரசியல் வாதியின் ஆசனத்துக்கு வரலாமே? 

வினா 04.  நீங்கள் ஒரு அரசியல் வாதியாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை தீர்மானித்து விட்டீர்களா? இது தொடர்பில் உங்களுக்கு வாக்களித்த மக்களின் கருத்துக்களை கேட்டுள்ளீர்களா? அவ்வாறெனில் அம்முடிவினை உங்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்களுக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் பகிரங்கமாக கூற முடியுமா? 

மேற்கூறிய வினாக்களுக்கு பா.ம உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கூடிய விரைவில் பதில் தருவார் என்று நினைக்கிறன். ( இவ்வினாக்கள் அனைதும் மக்கள் சார்பாகவே என்னால் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது, நடு நிலையாக சிந்திக்கின்ற எவருமே இதனை புரிந்து கொள்ள முடியும்)
 
இறுதியாக சக்தி தொலைகாட்சியிடம் ஒரு வேண்டுகோள்.

நடுநிலையான இலங்கையின் ஒரே ஒரு தமிழ் தொலைக்காட்சியாக ஆரம்பம் முதல் இன்றுவரை சக்தி டிவி செயற்பட்டுவருகின்றமை பாராட்ட பட வேண்டியது. நடு நிலையாக உண்மையை சொல்வதற்கு பலவேறு தடவைகள் சக்தி டிவி மற்றும் மகாராஜா தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு  பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்ட போதும் இன்றும் நடுநிலையாக உண்மையை உலகுக்கு தெரிவிக்கின்ற தொலைக்காட்சி குழுமமாக அது செயற்பட்டு வருகின்றது. இன் நிலையில் சக்தி டிவி யின் மின்னல் நிகழ்ச்சியானது இன் நாட்டில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களுக்கு தேவையாகும். அதை நிறுத்துகின்ற கதைகளுக்கு இடமளிக்க முடியாது.

ஆனாலும் அந் நிகழ்ச்சியை ஒரு அரசியல் வாதி நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடுநிலையான நபர்  ஒருவரினால் அந்நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். அவர் அரசியல் சார்பானவராக இருக்கக் கூடாது. 

அவ்வாறான தொரு மின்னல் நிகழ்ச்சியையே இனிமேல் சக்தி டிவி எங்களுக்கு வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் நடுநிலையான மின்னல் வாசகர்கள் சார்பாக விடுக்கின்றேன்.

4 comments:

  1. 100% true. Ranga, not suitable for this prog.

    ReplyDelete
  2. தம்பி நியாஸ்,
    உங்கள் நேரத்தை வீணடித்து எழுதிய இந்த ஆக்கம், நிச்சயமாக ஆக்கபூர்வமானதாக இல்லை.

    ரங்காவில் ஏற்பட்ட கால்புணர்ச்சியில் கேட்கவேண்டும் என்ற நோக்கில் எதையெல்லாம் கேட்கிறீர்கள்.

    உங்களின் கேல்விகளுக்கு றங்கா சார்பில் நானே பதிலலிப்பேன் ஆனால் வேண்டாம், அதனை பிரசுரிக்கவும் ஜப்னா முஸ்லிமுக்கு நேரமிருக்காது.

    ReplyDelete
  3. உண்மையிலேயே இது கேட்கப்படவேண்டிய கேள்விதான்

    ReplyDelete
  4. தம்பி Shajahan
    நியாயம் எப்பக்கம் இருப்பினும்
    அதனை ஏற்றுக் கொள்ளும்
    பக்குவம் உங்களுக்கு அவசியம்

    ReplyDelete

Powered by Blogger.