Header Ads



நாங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம் - ஹரீஸ்

(ஹாசிப் யாஸீன்)

'முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நான். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் மக்கள் முற்கூட்டியே முடிவெடுத்து விட்ட சரித்திரம் இம்முறை அமைந்துள்ளது.'  இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உணர்ச்சி பீறிட்டுக் கூறினார்.

சாய்ந்தமருது அல் - ஜலால் வித்தியாலய ஜீ.சீ.ஈ. சாதரண தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். வித்தியாலய அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் ஆரம்பத்தில் அவரது நிதி ஒதுக்கீட்டில் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சுற்று மதிலை சம்பிரதாயபூர்வமாக ஹரீஸ் எம்.பி. திறந்து வைத்தார். விழாப் கூட்டத்தில் ஹரீஸ் எம்.பி. தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியவை வருமாறு,

'எல்லா தொலைக்காட்சியிலும் காணி அமைச்சர் ஜானகபண்டார தென்னக்கோன் மக்கள் சமுத்திரத்தின் முன்னிலையில் அழுது புலம்பிய காட்சியைக் கண்டோம். இது பெரும்பான்மை சமூகத்தின் மத்தியிலும், சிறுபான்மை சமூகங்கள் மத்தியிலும் சிந்திக்கத் தூண்டிய விடயமாக அமைந்தது. இந்த ஆட்சியிலுள்ள மிகப்பெரிய அவலங்களை பெரும்பான்மை சமூக அமைச்சர் மக்களிடம் சொல்லி அழுது புலம்புகிறார் என்றால், இந்த நாட்டின் முஸ்லிம் அரசியல் தலைமைகளாகவுள்ள நாங்கள் கண்ணீரல்ல இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம்.

இதனால் முஸ்லிம் சமூகத்தின் அவலநிலை பற்றி நாம் எவ்வளவோ வலியோடு இருந்து கொண்டிருக்கிறோம். எவ்வளவோ வலிகளை எம் இதயம் தாங்கிக் கொண்டிருக்கிறது. இதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். எவ்வாறு நிஜ வாழ்க்கையில் இரவும் பகலும் இருக்கின்றனவோ, அப்படியே நாட்டின் அரசியலும் ஆட்சியும் உள்ளன. இதன்படி இன்றைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பகலில் வெளிச்சத்தில் நடக்கும் விடயங்கள்தான் மக்களை வந்தடைகின்றன.

ஆனால் இரவின் இருட்டில் நடக்கும் விடயங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இருட்டில் பல காய்நகர்த்தல்கள் இடம்பெறுகின்றன. நாடு சம்பந்தமான தீர்மானங்களும் இருட்டில் முடிவெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த இருட்டுக்குள் 'டோர்ச் லைற்' பிடித்துக் கொண்டு என்னதான் இந்த நாட்டில் இவர்கள் செய்யப்போகிறார்கள் என்பதை புலனாய்வாளர்கள் போன்று முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

இந்த இருட்டு விடயத்தை ஜனாதிபதியே ஆதாரபூர்வமாகக் கூறியிருக்கிறார். தன்னுடன் இருந்து இரவு அப்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்த எனது பொதுச் செயலாளர் அடுத்த நாள் பொது வேட்பாளராக வருகிறார் என்று அவர் கூறிய விடயம் போன்று பல விடயங்கள் நாட்டில் நடக்கின்றன. இதில் முஸ்லிம் சமூகம் ஒரு வகிபாகத்துடன் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ் சமூகத்துக்கும் ஒரு வகிபாகம் இருக்கிறது.

எமது வகிபாகத்தை மக்களுடைய விடயமாக மாற்றுவதற்கு கடும் பிரயத்தனங்களை செய்து வருகின்றோம். இன்றைய நிலையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் சமூகம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது விறுவிறுப்பான விடயமாக மாறிவிடும். இதன்படி முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் என்னவென்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பான அலைகளை இன்னும் ஒரு வாரத்தில் ஏற்படுத்தப் போகின்றது. இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் எம் போன்றவர்களிடம் அக்கறையுள்ளவர்கள் கேள்வி கேட்கின்றனர்.

எனது 'பேஸ்புக்'கில் 42 ஆயிரம் பேர் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். எனது பக்கத்தில் பட்டவர்த்தனமாக எழுதுகின்றனர். அதில் ஒருவர் சொல்கிறார் 'இந்த முஸ்லிம் சமூகத்துக்கு லிப்ஸ்ரிக் மேக்கப் பொருள்கள் தேவையில்லை. எமது மானத்தைக் காப்பதற்கு உள்ளாடையைப் பெற்றுத் தாருங்கள்' என்கிறார். இதில் யதார்த்தமான, சிந்திக்கவேண்டிய கருத்துக்கள் உள்ளன.

இன்னும் அரசியலில் சரியான வகிபாகத்தை அடையாத சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது என்பதே என்னுடைய பார்வையாகும். இந்த நிலையில் மிகப்பெரியதொரு ஆபத்தான விடயம், சமூகத்தின் போராட்டத்துக்கு தலைமை தாங்கிவந்த முஸ்லிம் காங்கிரஸை விட்டு, எதிர்வரும் ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் இப்படித் தான் முடிவு எடுத்து விட்டோம் என உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த விடயத்தை எமக்கு ஆபத்தான சமிக்ஞையாக நான் பார்க்கின்றேன். இதற்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸை விட்டும் மக்கள் முந்தி - முற்கூட்டித் தாமே தீர்மானம் எடுத்த வரலாறில்லை. முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் தீர்மானங்களுக்காகக் காத்திருந்த சமூகம் இன்று தங்களுக்குள் பெருமுடிவை எடுத்துவிட்டு, மக்கள் எம்மை வழிநடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

என் பார்வையில் மக்களின் இந்த முடிவில் எத்தவறையும் காணவில்லை. இதுவரை சமூகத்தை மட்டுமின்றி நாட்டைப் பற்றியும் சிந்தித்து நல்ல முடிவெடுக்கும் ஒருவனாக அந்த உணர்வுகளை ஏற்றுக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினராக நான் என்னைத் தயார்ப்படுத்திவிட்டேன்.

முஸ்லிம் காங்கிரஸை ஜனாதிபதி சந்தித்தபோது இச்சந்திப்பில் கலந்துகொள்ள என்னையும் தலைவர் ஹக்கீம் அழைத்தார். அச்சந்திப்பில் எப்பயனும் கிடைக்காதெனக் கூறி நான் கலந்துகொள்ளவில்லை. சந்திப்பின் முடிவு அவ்வாறே அமைந்தது என்றார்.

11 comments:

  1. கௌரவ பா.உ ஹரீஸ் அவர்களே ,, இவ்வாறு பேசிக் கொண்டு இருப்பதை விட்டு , நீங்களும் , ஹசனலி சாரும் பொது எதிரணிக்கு ஆதரவளித்து சமூகத்துடன் ஒன்றுபடுங்கள். உங்கள் எதிர்காலமும் வளமடையும்... குறிப்பு : நீங்கள் முஸ்லிம் காங்கிரசிலே இருந்து கொண்டு சமூகத்துக்காக இந்த முடிவை எடுங்கள் ( Stay @ SLMC) ... உங்களை நிறைய விடயங்களில் அவதானித்து இருக்கிறேன் அதிகமான தடவைகள் யாருக்கும் பயப்படாமல் சிறுபான்மை இனத்துக்கு எதிரான விடயங்களை ( மின்னலில்கூட ) காரசாரமாக பேசியதற்கும் நன்றிகள் பலகோடி.. #MY3# #CHANGE#

    ReplyDelete
  2. சார் பேசி பேசி எவ்வளவு காலத்தை கடத்த போகிறீர்கள்.உங்கள் தலைவர் அப்படி என்னதான் நக்குண்டாரோ தெரியாது.தர்ம சங்கடமான நிலையில் மதில் மேல் பூனை போல் இருக்கிறார்.உங்களுக்கு நான் ஒன்றும் சொல்ல தேவை இல்லை நீங்கள் அண்மைகாலமாக யதார்த்தமாக நடக்கிறீர்கள் நன்றி.செயலாளரும் கூட.ஜனாதி பத்தியை சந்திக்க போனவர்கள் என்ன சார் பல்லை காட்டி விட்டு வந்துள்ளார்கள் ஒன்றும் பேசவில்லையா சீ இன்னுமா நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. பொது மக்களாகிய நாங்கள் உங்களுக்கு தரவேண்டிய மரியாதையை இத்தனை வருடமாக தந்தோம் அதனால்தால் கடந்த காலங்களில் உங்களின் மேலான முடிவுக்காக காத்திருந்தோம் எப்போது நீங்கள் எல்லாம் பணத்துக்காகையும் சுகபோக வாழ்க்கைக்காகவும் விலைபோநீர்களோ அன்றுடன் மக்கள் உங்களை வேருக்க ஆரப்பித்து விட்டார்கள் நீங்களும் உங்கள் தலைமையும் இதுவரை முஸ்லிம்களின் உண்மையான தலைவர்களாக இருந்திருந்தால் எப்போதோ அரசை விட்டு வெளியேறி இருப்பீர்கள் காலம் கடந்து விட்டது அடுத்த பாராளுமன்ற தேர்தல் உங்களுக்கு என்ன ஆகும் என்பது அல்லாஹ்தான் அறிவான் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு இப்போ பொது மக்களுக்கு தெரியும் முஸ்லிம் காங்கிரஸ் கச்சியில் எத்தனை முனாபிக்குகள் உண்டு என்பது

    ReplyDelete
  4. What you says is correct because Muslims do not trust the SLMC now, if SLMC need votes in future election to save their MPs go with the Muslim tide, however Harees, you don't need to leave the SLMC this is not Baseer's or Naseer's even Hakeem's grandfathers' party. Remember it is the only party that can represent Muslims. I know you personally, you are not a person who is sold for billions, so be with the community, canvas for whom the community wish to vote, do not vote for destroying mosques, religion, and Muslim dignity.

    ReplyDelete
  5. Yes, he is too gud then others, innumoru thalaivanai ( Ashraf ) awaihalai ponru kilakilirunde waramdium, idai piradesa wadam endru karuda wendam, nan kandy yai serndavan en ulmana kooruhiradu appaithan nadakum enru. SLMC nadalumandra urupinarhaluku oru wendukol, idatku munnal SLMC in urupinarhal than suyanalathitkaha amadu katchiyai adan kolhaihalai wittu ponadai ponru neengalum seiduwida wendam, idu perum thiyahathitku maththiyil uruvakapatta maram, anda ma manidarin wali nadavungal, indru anda manidarukaha dua seiyum inda muslimmakkal, insha allah nalai ungalukahavum dua seivom, adatku poruthamana murayil emadu makkalin meedana umadu porupuhalai engalai piradinithuthuva paduthum nadalumandara urupinar enra murayil seivadatku urupoonungal. Ellam valla allah ungaluku anaithu udavihalaum seivanaha, ameen.

    ReplyDelete
  6. ஸ்ரீ லங்கா முனாபிக் காங்கிரஸ் (SLMC) எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை நீங்கள் முஸ்லிமாக இருக்க முயச்சிக்கலாமே!

    ReplyDelete
  7. Helo Mr. Seyed Please Don't Say Wrong About Muslim Congress Because We Have angry With That SLMC Members Only( forget Them ) Not SLMC All Muslims are Still Love SLMC This Product From M.H.M. Ashraff Not From Hakkem.

    ReplyDelete
  8. காலம் கொடுத்த மாற்றம் இது மக்களினை மடையர்களாக எண்ணி அவர்கல் முதுகிலே சந்தோசமான சவாரி செய்த பல அரசியல்வாதிகளுக்கு இன்றைக்கு தூக்கம் கெட்டுப் போய் இருக்கிறது , இலங்கையிலே அரசியல் புரட்சி நடந்திருக்கிறது ,இப்புரட்சியிலே முஸ்லிம் கட்சிகள் பங்கேற்கவில்லையே எனும் அவப்பெயரினை நீங்களெல்லாம் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதே சாலச்சிறந்த அரசியல் சாணக்கிய நகர்வாகும்.

    அதை விடுத்து பஷீர் சேகு டாவூட்டின் தனி முடிவுகளோடு ஒத்தூதி மு.காவினை அழித்தொழித்துவிடவேண்டாம். மக்கள் சக்தி இப்போது கடலையாக புரண்டுள்ளது சக்திமிக்க அலையிலே சாதுரியமாக உங்கள் காய்களினை நகர்த்துவதே சாணக்கியமானதாகும் !

    காலம் கடத்துவதிலே பிரயோசனம் இல்லை !

    ReplyDelete
  9. Dear Brothers and Sisters in Islam Please put you comments in a good way and please consider the community not the person, who ever doing the politics in our community are should feared to ALLAH and they should responsible to say answer in AAHIRAH, therefore please keep our words in your mind, and we already decided to vote against MR but our party bargaining something to community (Kalmuni District and Chief Minster) or personnel (money), and in my point of view, I am thinking to get both should happen because we have scarified a lots in this government and loose a lot because of BBS activities supported by MR company

    ReplyDelete
  10. அவசரப்பட்டு இப்பவே இரத்தக்கண்ணீர் வடிக்காதிங்க பாராளுமன்றம் வரட்டும்.

    ReplyDelete
  11. போராளிகள்!!!???மன்னிக்க
    ஒன்றை உறுதியாகச் சொல்கின்றேன் கறித்து வைத்துக் கொள்ளுங்கள்.புலிகள் அராஜகம் செய்தார்கள் கொஞ்சக்காலம் பனிச்சென்றிருந்தவிட்டு அனைந்துவிட்டார்கள்.ஆட்சியும் அப்படியே
    அதெ வேளை முஸ்லிம்களுக்க அநீதி இழைக்கும் சக்திகளுள் முதன்மையானது மு.க. ஏனென்றால் மு.கா. என்ற முஸ்லிம்பேர்தாங்கிய ஏமாற்று உலகாசை பிடித்த ஆண்டனுக்குப் பயப்படாத அரசியல் ஆசாமிகளால் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தற்போத யாராவது இலங்கை முஸ்லிம்களுக்கு உதவ விரும்பினால் தேன்தடவப்பட்ட நஞ்சாகிய முஸ்லிம்காங்கிரசிடம் இருந்து காப்பாற்றுங்கள். கவதைகளாலும் எழுச்சிப்பாடல்களாலும் போஸ்டர்களாலும் உணர்ச்சிவசப்படுத்தப்படல்களாலும் ஒரு சமுகம் இங்கே திட்டமிட்டு முடமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது(அது அறியாத நிலையில்)

    ReplyDelete

Powered by Blogger.