கிழக்கு சுகாதார அமைச்சரே..!
நிந்தவூர் வைத்திய சாலையில் நிகழ்ந்த சம்பகமானது ஒன்றரை வயது குழந்தை நீரில் முழ்கி அரை உயிருடன் சிகிச்சைக்காக நிந்தவூர் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டது. கடமையில் இருந்த வைத்தியர் குழந்தை உயிருடன் இல்லை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் படி கூறியுள்ளார்.
குழந்தையை தன் தாய் வீட்டுக்கு கொண்டு சென்ற போது குழந்தைக்கு உயிர் இருந்து இருக்கிறது பின்னர் மீண்டும் அதே வைத்திய சாலைக்கு எடுத்து சென்றுள்ளார், மற்றொரு வைத்தியர் குழந்தைக்கு சிகிச்சை செய்யும் பொது குழந்தையின் உயிர் சற்று முன்னர்தான் போயிருக்கிறது என்று வைத்தியர் கூறி இருக்கிறார்.
வைத்தியரின் அசாதின காரணமாக குழந்தையின் உயிர் போயிருக்கிறது இது மட்டுமல்ல கடந்த காலங்களில் இப்படியான அசாதின காரணமாக பல உயிர்கள் வீணாப் போயிருக்கிறது. இது ஒரு கொலைக்குச் சமன் இப்படி பட்ட வைத்தியர்கள் மீண்டும் கடமையில் அமர்த்தப்பட்டால் நோயாளிகளின் உயிருக்கு என்ன உத்தரவாதம் பெரிய கட்டடங்கள கட்டி விட்டு ஒரு ஆம்புலன்ஸ்(ambulance) இல்லாத வைத்திய சாலையா நிந்தவூர் வைத்திய சாலை.
தயவு செய்து உங்களால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது சட்டத்தின் முன் உரிய வைத்திய அதிகாரி நிறுத்தப்பட வேண்டும்.இது தொடருமானால் நிந்தவூர், நிந்தவுருக்கு அண்மித்த ஊர்களில் இருந்து வரும் நோயாளிகளின் நிலைமை கவலைக்குரியதாய் இருக்கும்.
தயவு செய்து இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிந்தவூர் மக்கள் சார்பாக மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
Post a Comment