Header Ads



''ஹமாஸை எதிர்த்து, நாங்கள் தொடர்ந்து முழு வீச்சில் போராடுவோம்''

ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் புதன்கிழமை நீக்கியது.

எனினும், ஹமாஸ் இயக்கத்தின் சொத்துகள் முடக்கம் தொடரும் எனவும் அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுகுறித்து அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஊடகங்களிலும், இணையதளங்களிலும் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் 2001-ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு சேர்க்கப்பட்டது.

ஒரு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதற்குரிய சட்டப்பூர்வமான அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.

தற்போது விதிமுறைகளின் அடிப்படையில்தான் அந்தப் பட்டியலிலிருந்து ஹமாஸ் அமைப்பின் பெயர் நீக்கப்படுகிறதே தவிர, ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்பது இந்தத் தீர்ப்பின் பொருள் அல்ல.

பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஹமாஸ் நீக்கப்பட்டாலும், அந்த அமைப்பின் சொத்துகள் முடக்கம், 3 மாதங்களுக்குத் தொடரும்.

அதற்குள் ஐரோப்பிய யூனியன் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யலாம் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பாலஸ்தீனர்களுக்குக் கிடைத்த வெற்றி'

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து ஹமாûஸ நீக்க ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அந்த இயக்கம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ""இந்தத் தீர்ப்பு பாலஸ்தீனர்களுக்கும், அவர்களது உரிமைகளுக்கும் கிடைத்த வெற்றி'' என்றார்.

மீண்டும் தடை: இஸ்ரேல் வலியுறுத்தல்

ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாதிகள் பட்டியலில் மீண்டும் ஹமாûஸச் சேர்க்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ஐரோப்பிய யூனியனை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ""கொலை வெறி கொண்ட பயங்கரவாத இயக்கமான ஹமாஸ், இஸ்ரேலை அழிக்கும் நோக்கத்தை வெளிப்படையாகக் கூறி வருகிறது. அந்த அமைப்பை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து முழு வீச்சில் போராடுவோம்'' என்றார்.

No comments

Powered by Blogger.