Header Ads



மஹிந்த பங்குகொள்ளும், ஹிஸ்புல்லாவின் கூட்டத்திற்கு செல்லமாட்டேன் - அமைச்சர் றிசாத்

காத்தான்குடியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரித்து, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில், தான் கலந்தகொள்ள மாட்டேன் என அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டார்.

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இதுகுறித்து தகவல் தந்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த மஹிந்தவுக்கா அல்லது மைத்திரிக்கா ஆதரவளிப்பது என்ற இறுதித் தீர்மானத்தை நாம் மேற்கொள்ளவில்லை. முஸ்லிம் சமூகத்தின் நலன்களை முதன்மைப்படுத்தி செயலாற்றுபவன் என்ற வகையில், தொடர்ந்து கலந்துரையாடல்களிலும், மக்கள் அபிப்பிராயங்களை அறியும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை, ஆதரித்து காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் தான் பங்கேற்கமாட்டேன் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

2 comments:

Powered by Blogger.