Header Ads



கணவரின் ஆபரேஷனுக்காக “குழந்தையை விற்க பிச்சைக் கேட்கிறேன்”

சீனாவின் ஃபுசோ நகரத்தைச் சேர்ந்தவர்  நீ கியோங். இவர் தனது கணவர் சவ் குய்க்சிங்-இன் மருத்துவச் செலவுகளுக்காக தன் ஒரு வயது மகளை விற்க முயற்சி செய்தது கடந்த திங்கள் அன்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வியாழனன்று அவரது கணவர் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு சூப்பர்வைசராக பணிபுரிந்த நபர் சவ்விடம் 115 டாலர் பணத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சவ்வை குணப்படுத்த அதிக தொகை செலவாகும் என தெரியவந்தது. இதையடுத்து மூன்று பெண் குழந்தைகளின் தாயான, நீ கியோங், “குழந்தையை விற்க பிச்சைக் கேட்கிறேன்” என்று எழுதப்பட்ட பதாகையைத் தாங்கியபடி மண்டியிட்டு இருக்கும் புகைப்படம் பல இணைய செய்தித் தளங்களில் வெளியானது. மேலும் அந்த பதாகையில் ”என் கணவர் விபத்தானதிலிருந்து அந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர் தலை மறைவாகி விட்டார். மருத்துவச் செலவுக்கு என்னிடம் பணமில்லை. என் குழந்தையை விற்று என் கணவரைக் காப்பாற்ற உதவுங்கள்” என்றும் எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீ கியோங் தனக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ’டென்சென்ட்’ என்ற இணைய செய்தித் தளம், அவரது கணவரின் வங்கிக் கணக்கு எண்ணை வெளியிட்டு மருத்துவச் செலவுக்குத் தேவையான நிதியை அளித்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.