முஸ்லிம் காங்கிரஸ், மைத்திரிக்கு ஆதரவளிப்பது திட்டவட்டமானது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளர் மைத்திபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது திட்டவட்டமாகியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸிற்கு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பிரதான வாக்குறுதி நேற்று 18 ஆம் திகதி நள்ளிரவு வரை நிறைவேற்றிக் கொடுக்கப்படாமையை அடுத்தே முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது உறுதியாகியுள்ளது.
இதனை முஸ்லிம் காங்கிரஸ் உயர்வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உறுதிபட தெரிவித்தன.
முழுமையான கரையோர மாவட்டம் வழங்கு வர்த்தமானி (கெசட்) அறிவித்தல் பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு 48 மணித்தியாலம் காலக்கெடு விதித்திருந்தது. அந்தகக்காலக்கெடு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment