அரசு, என்னை கொலை செய்யவே முயற்சிக்கிறது - மைத்திரிபால
தமக்குள்ள பாதுகாப்பை அகற்றி விட்டு அரசு என்னை கொலை செய்யவே முயற்சிக்கிறது என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலகமுவையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் தனக்கான பாதுகாப்பிற்கு 7 பாதுகாப்பாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக்ஷவிற்கு எந்தளவு பாதுகாப்பு உள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளனர்.
எனினும் மக்களின் ஆதரவு பாதுகாப்பும் எனக்கிருப்பதால் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை.
மக்கள் பாதுகாப்பே எனக்குள்ளது என்ற மன நிறைவோடு நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக தேர்தலில் இறங்கியுள்ளேன் பயத்துடனும் அச்சத்துடனும் வாழ்வதை விட நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றும் பொருட்டு ஊழல் மோசடிகளுக்கு எதிராக மக்களின் ஜனநாயக சுதந்திரத்திற்காகவும் சத்தியத்திற்காகவும் போராடி வீரனாக மடிவதே மேல் என்ற இலட்சியத்தை கொண்டே உங்கள் மத்தியில் வந்துள்ளேன் என்றார்.
ராஜபக்சக்களுக்கு கொலை செய்வதென்றால் சர்வசாதாரணம்.
ReplyDeleteமக்களை விழித்தெழவைத்து எடுத்தால் ராஜபக்சக்களால் ம.வையும் புடுங்க முடியாதளவிற்கு செய்யலாம்